புட்டின் – ட்ரம்பிடையே ஒரு மணிநேரம் தொலைபேசி உரையாடல்
உக்ரைனில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்னிடம் சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது உக்ரைன் போர்க்களத்தின் உண்மையான நிலவரத்தை புட்டின் விவரித்ததாக தெரியவருகிறது.
அத்துடன் நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கான அமெரிக்க அதிபரின் திட்டங்களின் பின்னணி உட்பட, உக்ரைன் விவகாரம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.
உக்ரைனில் அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும் புட்டின் இதன்போது எடுத்துரைத்துள்ளார்.
ஆனால் அது ரஷ்யாவின் கொள்கை ரீதியான அணுகுமுறைகளைக் கருத்தில் கொண்டு அமைய வேண்டும் என்றும்,
சமரச முயற்சிகளை விட்காஃப் (Witkoff) மற்றும் குஷ்னர் (Kushner) ஆகியோர் தொடர்ந்து மேற்கொள்வார்கள் எனவும் புட்டின் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் மோதல் முடிந்தவுடன் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே திறக்கப்படும் ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகள் குறித்தும் இருதரப்பு உரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.




