உலகம்

கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் மரணத்திற்கு அழைப்பு

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில்  மறைந்த தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு இன்று  இடம்பெற்று வருகிறது.

இதில்  லட்சக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது கூட்டத்தின் முன்பு பேசிய கலைஞர் ஒருவர் ட்ரம்பின் மரணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கவிஞரான முகமது ரசூலி, “அமெரிக்காவுக்கு மரணம்!” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்!” என்ற கோஷங்களை எழுப்பினார்.

ட்ரம்பைக் குறிப்பிட்டு பேசிய அவர், “உலகிலேயே மிகவும் கேவலமான மனிதன் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறான்?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்குக் கூட்டத்தினர் ஆரவாரம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கருப்பு உடை அணிந்திருந்த பெருங்கூட்டத்தினர்  “அமெரிக்காவுக்கு மரணம்” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்” என்று முழக்கமிட்டதோடு,  பழிவாங்கு! பழிவாங்கு!” என்றும் கூச்சலிட்டனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்