குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வீட்டுத்திட்டம் -70,000 வீடுகளை நிர்மாணிக்க தீர்மானம்
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக 70,000 வீடுகளைக் கட்டும் நோக்கில், ஒரு பிரதான வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் ‘சொந்தமாக ஓர் இடம் – அழகானதொரு வாழ்க்கை’ (A Place of One’s Own – A Beautiful Life) எனும் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்டவர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 70,000 வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், 2027-ஆம் ஆண்டில் 10,000 வீடுகளைக் கட்டுவது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கான நிதியுதவித் தொகை 1 மில்லியன் ரூபாயிலிருந்து 1.5 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்படும்.
இதற்கேற்ப, இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டை 15 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது .
மேலும், ‘டிட்வா’ (Ditwah) வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டுவதற்காக 90 பில்லியன் ரூபாய் மேலதிக நிதியுதவியும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




