ஐரோப்பா

ஐரோப்பா முழுவதும் கலப்பு போர் அச்சம் – ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்

பிரான்ஸின் ரயில் நிலையமொன்றுக்கு இன்று காலை   வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஐரோப்பா முழுவதும் விடுக்கப்பட்டுள்ள போலியான வெடிகுண்டு மிரட்டல்களின் நீட்சியாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐரோப்பாவில் சமீபகாலமாகத் தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்தகைய “கலப்புப் போர்” (hybrid warfare) சூழலை எதிர்கொள்ள, ஐரோப்பா ஒருங்கிணைந்த பாதுகாப்பு அணுகுமுறையையும், அதை வழிநடத்த ஒரு அமைப்பையும் கொண்டிருக்க வேண்டும் என்று விஸ் ஏர்’ (Wizz Air)-ன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக நான் சமீபத்தில் ஐரோப்பிய ஆணையத்தைச் சந்தித்துப் பேசினேன். சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒன்றிணைந்து செயல்படவும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தினேன்” என்று கூறினார்.

ஐரோப்பா முழுவதும் இயக்கப்பட்ட ‘விஸ் ஏர்’ நிறுவனத்தின் 14 விமானங்களுக்குப் போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்