ஹங்கேரி ஜனாதிபதி தாமஸ் ஷுயோக்கை (Tamás Schujók) பதவிநீக்க புதிய வியூகம்
ஹங்கேரி ஜனாதிபதி தாமஸ் ஷுயோக்கை (Tamás Schujók) பதவியில் இருந்து நீக்க வழிவகை செய்யும் வகையிலான சட்டமூலம் ஒன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு பிரதமர் பீட்டர் மாக்யார் (Péter Magyar) அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
விக்டர் ஓர்பானின் ஆதரவாளராக ஜனாதிபதி ஷுயோக் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவரை பதவிநீக்கம் செய்வதன் மூலம் ஓர்பானின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மாக்யாருக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்த திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபத ஷுயோக்கின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையிலேயே, அவர் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




