ஐரோப்பா

UKவில் சட்டவிரோத வர்த்தகம் மற்றும் குடியேற்றக் குற்றங்களுக்க எதிராக கடும் நடவடிக்கை – 300க்கும் மேற்பட்டோர் கைது

சட்டவிரோத வர்த்தகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குடியேற்றக் குற்றங்களுக்கு எதிரான காவல்துறையின் பெரும் நடவடிக்கையின் போது, ​​ஐக்கிய இராச்சியம் முழுவதும் 57 குடியேறிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஊடக அறிக்கைகளின்படி, படகு மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழைபவர்கள் மீதான ஒடுக்குமுறையின் போது, ​​பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

ஜூன் 15 முதல் 20 வரை ஐந்து நாட்கள் நடைபெற்ற நடவடிக்கையின்போது, ​​மொத்தம் பத்து லட்சம் பவுண்டுகளுக்கும் அதிகமான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பெருமளவிலான சட்டவிரோத புகையிலை, சிகரெட்டுகள், கார்கள், போதைப்பொருட்கள் மற்றும் மின்சார பைக்குகளும் மீட்கப்பட்டதாகவும் தேசிய காவல்துறைத் தலைவர்கள் கவுன்சில் தெரிவித்துள்ளது.

700,000 பவுண்டுகள் மதிப்புள்ள திருட்டுப் பொருட்களை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது முடி திருத்தும் கடைகள், வேப் கடைகள், கார் கழுவும் நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களும் சோதிக்கப்பட்டன.

சட்டவிரோதமாகப் பணிபுரியும் குடியேறிகள் பெரும்பாலும் இதே வணிக நிறுவனங்களின் பின்னால் ஒளிந்துகொள்ள முயற்சிப்பதாக வாதிடப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்