இந்தியா செய்தி தமிழ்நாடு

பெரும்பான்மை நிரூபிப்பு: இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

  • May 13, 2026
  • 0 Comments

தவெக அரசுமீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு தமிழக சட்டப்பேரவையில் இன்று (13) நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார். அதில் 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ், திமுக கூட்டணியை முறித்து கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளித்தது. ஏனைய கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின. இதன்மூலம் […]

உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 09 பேர் படுகொலை, பலர் காயம்!

  • May 13, 2026
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள சந்தையொன்றில்  நேற்று  ரிக்ஷாவில் பொறுத்தப்பட்டிருந்த குண்டொன்று வெடித்து சிதறியதில் சுமார் 09 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உள்ளுர் காவல்துறை தெரிவித்துள்ளது.ஷ ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள இப்பகுதியில் வன்முறை அதிகரித்து வருவதற்கான சமீபத்திய அறிகுறியாக இது அமைந்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மர்வத் என்ற மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாக உள்ளூர் காவல்துறைத் தலைவர் அஸ்மத் உல்லா (Azmat Ullah) தெரிவித்துள்ளார். இந்தக் குண்டுவெடிப்புக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை, […]

உலகம்

அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாகும் வெனிசுலா – ட்ரம்ப் வெளியிட்ட புகைப்படம்!

  • May 13, 2026
  • 0 Comments

வெனிசுலாவை அமெரிக்காவின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கும் வரைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வரைப்படத்தில் அமெரிக்கக் கொடியும், ’51வது மாநிலம்’ என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளன. தனது நாடு அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறுவதை ஒருபோதும் கருத்தில்கொள்ளவில்லை என தற்போதைய ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸ் ( Delcy Rodriguez) கூறியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதற்கிடையே வெனிசுலாவின் எதிர்க்கட்சி தேர்தல்களை நடத்தக் கோரியுள்ளது.  , மே […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

வெல்க தமிழ் ஈழம்: தமிழக சட்டமன்றத்தில் ஒலித்த குரல்!

  • May 12, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வின்போது “வெல்க தமிழ் ஈழம்” என வன்னி அரசு தெரிவித்த கருத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பான காணொளியை பலரும் பகிர்ந்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினராக சட்டரீதியாக உறுதியேற்ற பின்னர், சில கருத்துகளை முன்வைப்பார் வன்னி அரசு. இதன்போது “ வெல்க தமிழ், வாழ்க தமிழ் நாடு, வெல்க தமிழ் ஈழம், தந்தை பெரியார் வாழ்க, எழுச்சி தமிழர் வாழ்க” என உரத்து குரல் எழுப்பினார். வன்னி அரசு, விடுதலை […]

உலகம் செய்தி

ஈரான் போர் தொடர்பாக பென்டகன் தலைவர் காங்கிரஸ் விசாரணையை எதிர்கொள்கிறார்

  • May 12, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்க–இஸ்ரேல் போர் தொடர்பாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் Pete Hegseth, அமெரிக்க காங்கிரஸின் புதிய விசாரணைச் சுற்றை எதிர்கொள்ள உள்ளார். இந்த விசாரணையில், மோதலின் நீடித்த காலம் மற்றும் காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து சில குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல சட்டமியற்றுபவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பாதுகாப்புச் செலவுகளை கண்காணிக்கும் சக்திவாய்ந்த பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் துணைக் குழுக்கள், 2027 ஆம் ஆண்டுக்கான இராணுவ பட்ஜெட் […]

அரசியல் இலங்கை செய்தி

அநுரவின் உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு!

  • May 12, 2026
  • 0 Comments

மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான், ரஞ்சித் மத்தும பண்டார, தயாசிறி ஜயசேகர, உள்ளிட்ட 24 எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

பிரபாகரனின் கதை முடிந்த மாதத்தில் மஹிந்த இலக்கு வைக்கப்படுவது ஏன்?

  • May 12, 2026
  • 0 Comments

“மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது. சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார். மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து மொட்டு கட்சியினர் திரண்டிருந்தனர். இதன்போதே மனோஜ் கமகே […]

உலகம் செய்தி

கடற்படை முற்றுகை – 65 வர்த்தகக் கப்பல்கள் திருப்பி விடப்பட்டதாக அமெரிக்கா தகவல்

  • May 12, 2026
  • 0 Comments

ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தனது கடற்படை முற்றுகை நடவடிக்கைகளில் இதுவரை 65 வர்த்தகக் கப்பல்கள் வேறு பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கைகளின் போது நான்கு கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு கூறியுள்ளது. இதனிடையே, ஈரான் அதிகாரிகள் ஹோர்முஸ் நீர்வழிப்பாதை தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை  அனுமதி இல்லாமல் எந்தக் கப்பல்களும் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் வலியுறுத்தி வருகின்றனர். […]

உலகம் செய்தி

ஈரான் மீதான போருக்கு அமெரிக்காவுக்கு 29 பில்லியன் டொலர் செலவு

  • May 12, 2026
  • 0 Comments

ஈரான் தொடர்பான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை சுமார் 29 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகியுள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத்துறையின் கணக்கியல் பொறுப்புகளை மேற்கொண்டு வரும் ஜூல்ஸ் ஹர்ஸ்ட், இந்தத் தகவலை  அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வெளியிட்டார். இந்த மொத்தச் செலவில் இராணுவ உபகரணங்களை பழுதுபார்த்தல், சேதமடைந்த சாதனங்களை மாற்றுதல் மற்றும் பல்வேறு  செயல்பாட்டு செலவுகள் அடங்குவதாக அவர் விளக்கமளித்தார். மேலும், கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டை விட இந்தச் செலவு […]

உலகம் செய்தி

அமெரிக்கா – ஈரான் உறவை காப்பாற்ற முயலும் பாகிஸ்தான்

  • May 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பலவீனமான  போர் நிறுத்தம் தற்போது ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, சாத்தியமான அமெரிக்கத் தாக்குதல்களிலிருந்து ஈரானிய இராணுவ விமானங்களுக்கு பாகிஸ்தான்  பாதுகாப்பு வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இஸ்லாமாபாத் நிராகரித்துள்ளது. ஒரு மாத கால போர் நிறுத்தம் தற்போது “மிகப்பெரிய உயிர்வழி ஆதரவில்” மட்டுமே நீடித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் அண்மையில் முன்வைத்த […]