இலங்கை செய்தி

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை, பாகிஸ்தான் ஆராய்வு!

  • May 12, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கையில் அவருடைய பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன், இரு தரப்பினரும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு கூட்டிணைப்பு […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுரவுக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி

  • May 12, 2026
  • 0 Comments

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துகளால் நான் பெருமையடைகிறேன். உங்களின் கனிவான வாழ்த்துகளுக்கு நன்றிகள்” என கூறியுள்ளார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை தேசிய இறையாண்மையின் ஒரு பகுதி என ஈரான் வலியுறுத்தல்

  • May 12, 2026
  • 0 Comments

ஈரான், ஹோர்முஸ் நீரிணையை தனது தேசிய இறையாண்மையின் ஒரு பகுதியாகவே கருதுவதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தெஹ்ரானில் இருந்து தகவல் வெளியிட்ட ஊடகவியலாளர் ஒருவர், அமெரிக்கா விதித்த முற்றுகை மற்றும் தொடரும் பிராந்தியப் போர் சூழ்நிலை காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் “புதிய சமன்பாடு” உருவாகியுள்ளது என ஈரானிய அதிகாரிகள் தெரிவிப்பதாக கூறினார். அந்த முக்கிய கடல் வழித்தடத்தின் மீது தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில் ஈரான் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹோர்முஸ் நீரிணை சர்வதேச வர்த்தகக் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய பிரதமருக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கிய பாதுகாப்பு அமைச்சர் 

  • May 12, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மருக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கிய சமீபத்திய அமைச்சரவை உறுப்பினர்களில் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி (John Healey) இணைந்துள்ளார். உலகளாவிய மோதல்கள் மற்றும் எதிர்கால நெருக்கடிகள் குறித்து மக்கள் கவலை அடைந்துள்ளதாக அவர் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பாதுகாப்பாக வழிநடத்த அரசாங்கம் செயல்படும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக கூறிய பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி (John Healey) பிரதமர் அதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போதைய சூழலில் […]

இலங்கை செய்தி

வவுனியாவில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி”! நீதிக்காக ஒலித்த குரல்!

  • May 12, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, இறுதிப் போரின் வலிகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா நகரில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் ஒன்றுகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் வழங்கி நினைவேந்தலை ஆரம்பித்தனர். யுத்தத்தின் இறுதி நாள்களில் குண்டு மழைகளுக்கு மத்தியிலும், உணவின்றித் தவித்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு இந்தக் கஞ்சி எவ்வாறு ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. […]

இலங்கை செய்தி

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

  • May 12, 2026
  • 0 Comments

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தப் பவனி, இன்று காலை யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றப்பட்டு உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஊர்திப் பவனியானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பயணிக்கவுள்ளது. […]

செய்தி தமிழ்நாடு

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க தூதரக அழுத்தம் தேவை – ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்

  • May 12, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 06 மீனவர்கள் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீனவர் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் கவலையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் இந்தக் கடிதத்தை […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் மீது தொடரும் விமர்சனம் – தொழிற்கட்சி எம்.பி கடும் குற்றச்சாட்டு

  • May 12, 2026
  • 0 Comments

பிரதமர் Starmer பதவியில் இருந்து விலகாமல் தொடர்ந்தும் பணியை மேற்கொள்வது, கட்சிக்குள் மேலும் பெரிய அரசியல் சவாலை உருவாக்கியுள்ளதென தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பவுலெட் ஹாமில்டன் (Paulette Hamilton) தெரிவித்துள்ளார். ஸ்டார்மரின் கட்சி சகாக்கள் ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கத் தயாராக இருந்ததாகவும், ஆனால் அந்த நம்பிக்கையை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் ஹாமில்டன் கூறியுள்ளார். மேலும், தற்போதைய அரசியல் நிலைமை தொழிற் கட்சிக்கு மட்டுமின்றி, நாட்டின் சர்வதேச மதிப்புக்கும்  பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தொழிற் கட்சி […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் புதிய இடப்பெயர்வு உத்தரவு 

  • May 12, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானில் உள்ள நான்கு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இஸ்ரேல் புதிய கட்டாய இடப்பெயர்வு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த பகுதிகளில் விரைவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எச்சரித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர வேண்டும் என்று […]

ஐரோப்பா செய்தி

பதவி விலகல் அழுத்ததிற்கு மத்தியில் பணியைத் தொடரும் ஸ்டார்மர்

  • May 12, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் Starmer, தன்னை பதவி விலகுமாறு கோரும் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் அதேவேளை பிரதமராக தனது பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்று அமைச்சர் டேரன் ஜோன்ஸ் (Darren Jones) தெரிவித்துள்ளார். ஸ்கை நியூஸிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பிரதமர் நேற்றைய தினம் ஆற்றிய உரையில் தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார் என்றும் அமைச்சர் டேரன் ஜோன்ஸ் கூறினார். மேலும், […]