செய்தி

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது

  • August 5, 2026
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று புதன்கிழமை காலை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முன்னிலையாகியிருந்தார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட […]

ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

டிரம்ப் ஒப்பந்தத்திற்கு நெதன்யாகு செக்: காசாவில் தொடரும் பதற்றம்

  • August 5, 2026
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நெதன்யாகுவின் இந்தக் கருத்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழியாகப் பார்க்கப்பட்ட ஹமாஸின் ஆயுதக் கலைப்பு ஒப்பந்தத்தின் மீது மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன், இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே பகிரங்கமாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் தனது ஆயுதங்களைக் களையத் தொடங்க வேண்டும்; அதேவேளையில் இஸ்ரேல் […]

ஐரோப்பா

எப்ஸ்டீன் வழக்கை தூசி தட்டும் பர்னம் : பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க தீர்மானம்

  • August 5, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் இங்கிலாந்தில் அவரது நடவடிக்கைகள் குறித்து பொது விசாரணை நடத்துவது தொடர்பில் பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்னம் பரிசீலித்து வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாதிக்கப்பட்டோர் துறை அமைச்சர் அலெக்ஸ் டேவிஸ்-ஜோன்ஸ் (Alex Davies-Jones) பிபிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் உயிரிழந்து 07 ஆண்டுகள் கடத்தப்பின் அவருடனான தொடர்பு பிரித்தானியாவின் அரச நிர்வாகத்தை பாதித்துள்ளது. இதன் விளைவாக, மன்னர் சார்லஸின் சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor,) மற்றும் அமெரிக்காவிற்கான […]

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பிரித்தானியப் பெண் ஒருவரைக் குத்திக் கொன்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

பிரித்தானியப் பெண் கொலை வழக்கு: ஆஸ்திரேலிய சிறுவனின் தண்டனை குறைப்பு ரத்து

  • August 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பிரித்தானியப் பெண் ஒருவரைக் குத்திக் கொன்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று (Boxing Day), பிரிஸ்பேனில் , எம்மா லவல்க்கு Emma Lovell (41) சொந்தமான வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இரு ஊடுருவல்காரர்களை அவர் தடுத்து நிறுத்தியபோது, கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பிரித்தானியாவில் Suffolk பகுதியைச் சேர்ந்த இவர், 2011-இல் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்து தனது […]

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஆறு தமிழ்ப்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு: இலங்கை தமிழ் பேசும் கட்சிகளுக்கு இந்தியா வழங்கிய ஆலோசனை என்ன?

  • August 5, 2026
  • 0 Comments

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஆறு தமிழ்ப்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்ப்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று மாலை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை சந்தித்துக் கலந்துரையாடினர். […]

சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“சிறைச்சாலைகள், குற்றவாளிகள் இல்லாத நாட்டை உருவாக்குவோம்” – அமைச்சர் சபதம்

  • August 5, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்நேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: மீனவர் வாழ்வாதாரம் மீட்பு “நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது இந்த நாடு பாரிய வங்குரோத்து நிலையில் காணப்பட்டது. குறிப்பாக மீனவர்கள் கடற்றொழிலுக்குச் […]

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

  • August 5, 2026
  • 0 Comments

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய இந்திய வெளியுறவுச் செயலரை, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வரவேற்றார். இந்தப் பயணத்தின் போது, ​​ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட மூத்த அரசாங்கத் தலைவர்களை இன்று […]

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தி நிறுவனம் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல், பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மெல்போர்ன் பாதுகாப்பு நிறுவனம் மீது பயங்கரவாதத் தாக்குதல்

  • August 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தி நிறுவனம் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல், பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீன ஆதரவு நோக்கங்களைக் கொண்டிருந்ததாகப் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஜூலை 5-ஆம் திகதி அதிகாலை, ‘லவிட் டெக்னாலஜிஸ்’ (Lovitt Technologies) என்ற இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், மூன்று வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன் கட்டிடத்திலும் சுவரோவியங்களை (Graffiti) […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸுடன் ஒற்றுமையாக உள்ளோம் – செவுட்டா புலம்பெயர் நெருக்கடியை தொடர்ந்து புரூனர் கருத்து

  • August 5, 2026
  • 0 Comments

செவுட்டா புலம்பெயர்ந்தோர் நெருக்கடியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பெயின் அரசாங்கத்துடன் “முழுமையான ஒற்றுமையுடன்” நிற்கிறது என்று   குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புரூனர் தெரிவித்துள்ளார். மொராக்கோவிலிருந்து சுமார் 70,000 ஐரோப்பிய ஒன்றியம் சாராத நாட்டினர் 24 மணி நேரத்திற்குள் ஸ்பெயினின் செவுட்டா பகுதிக்குள் நுழைந்த நெருக்கடியின் பின்விளைவுகள் குறித்து விவாதிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்கள் இணையவழியில் அவசரகாலக் கூட்டத்தை நடத்தின். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட புரூனர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட […]

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் ஆறு ஏவுகணை ஏவுதளங்களுடன் கூடிய வடகொரிய ஏவுகணைப் படைப்பிரிவு ஒன்று மேற்கு ரஷ்யாவில் களமிறக்கப்பட்டு வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாவில் களமிறங்கும் வடகொரிய ஏவுகணைப் படை: உக்ரைன் அதிர்ச்சி

  • August 5, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் ஆறு ஏவுகணை ஏவுதளங்களுடன் கூடிய வடகொரிய ஏவுகணைப் படைப்பிரிவு ஒன்று மேற்கு ரஷ்யாவில் களமிறக்கப்பட்டு வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைனிடம் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனையும் ரஷ்யா, சுட்டு வீழ்த்துவதற்கு மிகவும் கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறது. 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ரஷ்யா […]