எப்ஸ்டீன் வழக்கை தூசி தட்டும் பர்னம் : பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க தீர்மானம்
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் இங்கிலாந்தில் அவரது நடவடிக்கைகள் குறித்து பொது விசாரணை நடத்துவது தொடர்பில் பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்னம் பரிசீலித்து வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பாதிக்கப்பட்டோர் துறை அமைச்சர் அலெக்ஸ் டேவிஸ்-ஜோன்ஸ் (Alex Davies-Jones) பிபிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீன் உயிரிழந்து 07 ஆண்டுகள் கடத்தப்பின் அவருடனான தொடர்பு பிரித்தானியாவின் அரச நிர்வாகத்தை பாதித்துள்ளது.
இதன் விளைவாக, மன்னர் சார்லஸின் சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor,) மற்றும் அமெரிக்காவிற்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதரான பீட்டர் மாண்டல்சன் (Peter Mandelson) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் புதிய பிரதமரான பர்னம் விசாரணைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பார் என்றும், டேவிஸ்-ஜோன்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.




