இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய இந்திய வெளியுறவுச் செயலரை, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வரவேற்றார்.

இந்தப் பயணத்தின் போது, ​​ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட மூத்த அரசாங்கத் தலைவர்களை இன்று மதியம் வரை சந்திக்கவுள்ளார்.

இன்று பிற்பகல் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளையும், மலையக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தனித்தனியாக அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை