பிரித்தானியப் பெண் கொலை வழக்கு: ஆஸ்திரேலிய சிறுவனின் தண்டனை குறைப்பு ரத்து
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பிரித்தானியப் பெண் ஒருவரைக் குத்திக் கொன்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று (Boxing Day), பிரிஸ்பேனில் , எம்மா லவல்க்கு Emma Lovell (41) சொந்தமான வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இரு ஊடுருவல்காரர்களை அவர் தடுத்து நிறுத்தியபோது, கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
பிரித்தானியாவில் Suffolk பகுதியைச் சேர்ந்த இவர், 2011-இல் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்து தனது கணவர் மற்றும் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு, இக்கொலைச் சம்பவத்தின் போது 17 வயதாக இருந்த சிறுவனுக்கு (சட்டப்படி பெயர் வெளியிடப்படவில்லை) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அதில் 70% தண்டனைக் காலத்தைக் கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அந்தத் தண்டனைக் காலம் 60%-ஆகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை தீர்ப்பளித்த ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தண்டனைக் குறைப்பு முடிவை ரத்து செய்ததுடன், ஆரம்பக்கட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.




