உலகம் செய்தி

டிரம்ப் ஒப்பந்தத்திற்கு நெதன்யாகு செக்: காசாவில் தொடரும் பதற்றம்

ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு முற்றிலுமாக ஆயுதங்களை ஒப்படைக்கும்வரை காசாவில் தற்போதுள்ள எல்லைக் கோடுகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

நெதன்யாகுவின் இந்தக் கருத்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழியாகப் பார்க்கப்பட்ட ஹமாஸின் ஆயுதக் கலைப்பு ஒப்பந்தத்தின் மீது மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன், இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே பகிரங்கமாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் தனது ஆயுதங்களைக் களையத் தொடங்க வேண்டும்; அதேவேளையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்திவிட்டு, தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள காசாவின் 60% பகுதியிலிருந்து பின்வாங்கத் தொடங்க வேண்டும்.

கடந்த அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது அமைந்திருந்தது.
அந்த ஒப்பந்தம் மூலம் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, காசாவில் அடைக்கப்பட்டிருந்த எஞ்சிய பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். எனினும், அதன்பின்னர் ஏனைய நடவடிக்கைகளில் தேக்கநிலை ஏற்பட்டது.

டிரம்ப்பின் ‘அமைதி வாரியத்தின்’ (Board of Peace) அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் உரையாற்றிய நெதன்யாகு, ஹமாஸின் ஆயுதக் கலைப்பே முதலில் நடக்க வேண்டும் என திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இஸ்ரேலியப் படைகள் “தங்களையும், தமது நிலப்பரப்பையும், குடிமக்களையும் பாதுகாக்கத் தேவையான எதையும் தொடர்ந்து செய்யும்” என்றும் அவர் கூறினார்.

அக்டோபர் மாதம் அமெரிக்க ஆதரவுடன் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் பின்வாங்க வேண்டும் என்றும் கோரியது. அங்கு ஓர் சர்வதேச ஸ்திரத்தன்மைப் படை (International Stabilisation Force) உருவாக்கப்பட்டு, சுயாதீன பாலஸ்தீன நிர்வாகம் ஆட்சி மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைக் மேற்பார்வையிட இருந்தது.

ஆனால், தற்சமயம் ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கைவிடுவதிலேயே அனைத்தும் அடங்கியுள்ளது என இஸ்ரேல் கூறுகிறது. மறுபுறம், தாம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு முன் இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தி, காசா நிலப்பரப்பில் இருந்து பின்வாங்கத் தொடங்க வேண்டும் என ஹமாஸ் தெரிவிக்கிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி