முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று புதன்கிழமை காலை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முன்னிலையாகியிருந்தார்.
அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




