ஐரோப்பா

Make England Great Again : ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்!! 40இற்கும் மேற்பட்டோர் கைது!

  • May 17, 2026
  • 0 Comments

டாமி ராபின்சனின் ‘யுனைட் தி கிங்டம்’ பேரணி மற்றும் பாலஸ்தீன ஆதரவு நக்ஃபா தினப் பேரணி ஆகிய இரண்டு முக்கிய ஆர்ப்பாட்டங்களின் போது 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, சுமார் £4.5 மில்லியன் செலவில் 4000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கணிசமான காவல்துறைப் பாதுகாப்பும் இருந்தபோதிலும், பல்வேறு குற்றங்களுக்காக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் டாமி ராபின்சன் பேரணியில், ராபின்சன் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் கட்டளையை மீறிச்சென்ற கார் விபத்து – 09 பேர் காயம்

  • May 17, 2026
  • 0 Comments

லண்டன் நகரின் கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச்சென்ற காரொன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை நிறுத்த பொலிஸார் முயன்றபோது, அந்த கார் நிற்காமல் தப்பிச் சென்றதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த கார் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு கார்களிலும் இருந்தவர்கள் மற்றும் ஒரு மோட்டார் ஸ்கூட்டர் ஓட்டுநர் உட்பட மொத்தம் 10 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஒன்பது பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக […]

இந்தியா

பத்திர மோசடி : அதானி மீதான வழக்கை கைவிட தயாராகும் அமெரிக்கா!

  • May 17, 2026
  • 0 Comments

இந்திய தொழில் அதிபரான அதானி மீதான குற்றவியல் மோசடி வழக்கை கைவிட அமெரிக்கா தீர்மானித்துள்ளது. பத்திர மோசடி, சதித்திட்டம் மற்றும் கம்பிவழி மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதானி,  18 மில்லியன் டொலர் செலுத்த ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதானியும்  அவரது மருமகன் சாகர் அதானியும் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துடன் இந்த சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன்  இந்த ஒப்பந்தம் நீதிமன்ற ஒப்புதலுக்கு உட்பட்டது எனவும், […]

ஆஸ்திரேலியா செய்தி

நடுவானில் பயங்கரம்: பணிப்பெண்ணைக் கடித்த பயணி!

  • May 17, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்ற விமானத்தில், பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணைக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த விமானம் அவசரமாகத் திசைதிருப்பப்பட்டுத் தரை இறக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு நேற்று மதியம் குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் அங்கிருந்த ஊழியர்களிடம் மிகவும் மோசமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டார். ஒரு கட்டத்தில் அவர் அங்கிருந்த விமானப் பணிப்பெண் […]

உலகம்

காங்கோ மக்களை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று – அவசரநிலை அறிவிப்பு!

  • May 17, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் நோய் பரவியதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் மூன்று சுகாதார மண்டலங்களில், நேற்று (16)    எட்டு நோய்த்தொற்றுகள், மற்றும் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், 246 பேர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தே அவசர நிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை உகாண்டாவின் […]

செய்தி விளையாட்டு

குஜராத்தை வீழ்த்தியது கொல்கத்தா அணி!

  • May 17, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய Kolkata Knight Riders அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 248 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய Gujarat Titans அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 […]

இலங்கை செய்தி

துப்பாக்கியுடன் உலாவந்த 10 பேர் திருமலையில் கைது!

  • May 17, 2026
  • 0 Comments

திருகோணமலை , கோமரங்கடவல-மல்போறுவ பிரதான வீதியில் துப்பாக்கியுடன் டொல்பின் வேனில் பயணித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது. கோமரங்கடவல , பாணந்துறை மற்றும் அட்டுலுகம பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர்கள் தூர இடங்களில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் எனவும் குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து மிருகங்களை வேட்டையாடுவதற்காக சென்றவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் […]

ஐரோப்பா

இத்தாலியில் ஓட்டுநர் ஒருவரின் மூர்க்கமான செயல் – 08 பேர் காயம்!

  • May 16, 2026
  • 0 Comments

வட இத்தாலிய நகரமான மொடெனா (Modena)  நகரில் இன்று பாதசாரிகள் மீது கார் ஒன்று மோதியதில் 08 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் முப்பது வயது நிரம்பிய ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த ஓட்டுநர் தன்னை தடுக்க வந்த நபர் ஒருவரை கத்தியால் குத்த முற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

உலகம்

பொலிவிய ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : இராணுவத்தினர் குவிப்பு!

  • May 16, 2026
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் புதிய ஜனாதிபதியான  ரொட்ரிகோ பாஸின்  (Rodrigo Paz) ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையில் தலைநகர் லா பாஸில் ஒன்றுக்கூடிய சுரங்க தொழிலாளர்கள் பிரமாண்ட பேரணிகளை நடத்தியுள்ளனர். இதில் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் அங்கு காவலுக்கு நின்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் பேரணிகள் –  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு, 31 பேர் கைது

  • May 16, 2026
  • 0 Comments

லண்டனில் தீவிர வலதுசாரி தலைவர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியும், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டமும் ஒரே நேரத்தில் நடைபெற்றதால் தலைநகரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இரு பேரணிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலையை கட்டுப்படுத்த 4,000-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரு தரப்பினரையும் பிரிக்க “தூய்மையான மண்டலம்” எனப்படும் பாதுகாப்புப் பகுதியும் அமைக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் ட்ரோன்கள், காவல் குதிரைகள், நாய்கள் மற்றும் கவச […]