சிரியாவின் புறநகர்ப் பகுதியில் குண்டுவெடிப்பு – இருவர் பலி
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் நேற்று இரவு குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மினிபஸ்ஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாகவும் 14 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டமாஸ்கஸுக்கு வெளியே, பெரும்பாலும் ட்ரூஸ் மக்கள் வசிக்கும் ஜரமானா (Jaramana) பகுதியில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து, வெடித்துச் சிதறிய ஒரு வெள்ளை மினிபஸ்ஸின் சிதைவுகள் இழுத்துச் செல்லப்படுவதை சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளிக்காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.





