ஹேர்முஸ் வழியே பயணிக்க அமெரிக்க, இஸ்ரேல் கப்பல்களுக்கு தடை: ஈரான் வியூகம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற பகைமை நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே பயணிப்பதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலம் குறித்து ஈரானிய நாடாளுமன்றக் குழு பரீசிலித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி ஈரான் அரச ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு சட்டமூலத்தின் பிரகாரம், விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களின் சரக்கு மதிப்பில் 20 சதவீதம் வரை அபராதமாக வசூலிக்கப்படும்.
இந்தச் சட்டமூலம் இன்னும் நிபுணர்களின் ஆய்வில் மட்டுமே உள்ளதாகவும், வரைவு இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் தமது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு நிபுணர்களுக்கு நாடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.





