கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா
கியூபா மீது அமெரிக்கா இன்றைய தினம் புதிய தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்க கருவூலத் துறை இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சீனாவில் வசிக்கும் ஒருவர் மற்றும் ரஷ்யாவில் வசிக்கும் மற்றொருவர் உட்பட ஆறு கியூபர்கள் மற்றும் கியூபாவைத் தளமாகக் கொண்ட ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகத் தடை செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு கியூபர்கள் மீதும் கூடுதல் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.




