ரஷ்யா – உக்ரைன் போரில் பொதுமக்கள் மீதான தாக்குதல் – ஐ.நா கண்டனம்
உக்ரைன் – ரஷ்யா ஆகிய இருநாடுகளும் குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் பீரங்கி தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் எல்லையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரண்டு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ரஷ்யா உக்ரைனில் ஒரு ரயில் நிலையம் மற்றும் வர்த்தகக் கப்பலைத் தாக்கியது.
சமீபத்திய மாதங்களில் இரு தரப்பினரும் தங்களது தொலைதூரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர், இது பொதுமக்கள் இறப்பு எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.
கீவ் ரஷ்யா மீது சாதனை அளவிலான ஆளில்லா விமானங்களை ஏவி வருகிறது, அதே நேரத்தில் மொஸ்கோ வரலாறு காணாத ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் சமீபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே ஐ.நா சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.




