உலகம் செய்தி

எபோலா வைரஸின் புதிய திரிபால் 120 பேர் உயிரிழப்பு!! தடுப்பு மருந்தும் இல்லை!!

  • May 19, 2026
  • 0 Comments

எபோலா வைரஸின் ஒருவகையான புதிய திரிபான புண்டிபுக்யோ (Bundibugyo) வைரஸால் காங்கோவில் 120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பொதுவான எபோலா வகைகளைப் போலல்லாமல், இந்த புதிய  வைரஸுக்கு  குறிப்பிட்ட சிகிச்சைகளோ தடுப்பூசிகளோ இல்லை, இது தடுப்பு நடவடிக்கைகளைச் சிக்கலாக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோயுற்ற அல்லது இறந்த நோயாளிகளின் உடல் திரவங்களுடன் ஏற்படும் நெருங்கிய தொடர்பு மூலம் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகபட்ச ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஜைர் […]

ஐரோப்பா செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு லண்டனில் பேரணி

  • May 19, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு லண்டன் நகரில் பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணி நேற்று பிற்பகல் பாராளுமன்ற சதுக்கம் பகுதியில் ஆரம்பமாகியதுடன் Downing Street இல் நிறைவடைந்தது. தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொலை சம்பவத்தை உலக நாடுகளுக்கு மீண்டும் நினைவூட்டும் நோக்கில் இந்த பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற இந்த பேரணியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து நீதிக்கான கோரிக்கைகளை முன்வைத்து […]

ஐரோப்பா

எஸ்டோனியாவின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ட்ரோனால் பரபரப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

உக்ரைனில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் ட்ரோன் ஒன்று எஸ்டோனியாவின் வான்பரப்பிற்குள் நுழைந்த நிலையில், நேட்டோ படையினர் சுட்டு வீழ்த்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. பால்டிக் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர்  ( Hanno Pevkur) இன்று இந்த தகவலை வெளியிட்டார். மார்ச் மாதம் முதல் ரஷ்யாவை ஒட்டியுள்ள நேட்டோ உறுப்பு நாடுகளான பின்லாந்து, லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியாவின் வான்வெளிக்குள் பல உக்ரேனிய இராணுவ ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. மேலும், இந்த ஊடுருவல்களைக் கையாண்ட விதம் குறித்து லாட்விய […]

இந்தியா இலங்கை செய்தி

SriLankan ஏர்லைன்ஸ் சென்னை அலுவலகத்தில் நிதி மோசடி!

  • May 19, 2026
  • 0 Comments

SriLankan Airlines நிறுவனத்தின் சென்னை கிளையில் பணியாற்றிய சில இந்திய ஊழியர்கள் சுமார் 2.2 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த இந்த பணியாளர்கள், விலைப்பட்டியல்கள் மற்றும் கையொப்பங்களை போலியாக மாற்றி நீண்ட காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக SriLankan Airlines நிறுவனம் இந்திய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இழந்த பணத்தை மீட்பதற்கான விசாரணைகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஐரோப்பா

ஸ்பெயினில் பரபரப்பு – தனது பெற்றோரை சுட்டுக் கொன்ற இளைஞர்!

  • May 19, 2026
  • 0 Comments

ஸ்பெயினின்  அல்மேரியா (Almeria) மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் ஒன்றில்  நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில்  இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 04 பேர் காயமடைந்துள்ளனர். 25 வயதுடைய தாக்குதல்தாரி தனது பெற்றோரை சுட்டுக் கொன்றதுடன், தனது மகன் உட்பட நான்கு பேரை காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறதுது. அதேநேரம்  குறித்த இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் […]

இலங்கை செய்தி

பிரதமர் லண்டனை சென்றடைந்தார்

  • May 19, 2026
  • 0 Comments

இலங்கை பிரதமர் கலாநிதிய ஹரிணி அமரசூரிய உத்தியோகப்பூர்வ விஜயமாக லண்டனை சென்றடைந்துள்ளார். அவர் நேற்று பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர, பிரித்தானிய பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியும் முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகருமான ரிச்சர்ட் வைல்டாஷ் (Richard Wildash) உள்ளிட்ட இராஜதந்திரிகள் பிரதமரை வரவேற்றனர். 43 ஆவது பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் (COL) நிர்வாகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு […]

உலகம் செய்தி

விட்டுக்கொடுக்க மறுக்கும் இரு துருவங்கள்: கைகூடுமா அமைதிப் பேச்சு?

  • May 19, 2026
  • 0 Comments

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான சமாதான முயற்சிகள் கைகூடுமா என்பதில் தொடர்ந்தும் சந்தேகம் நிலவி வருகின்றது. அணுசக்தி செறிவூட்டல் மற்றும் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவித்தல் போன்ற முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பாரிய கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மீதான இறையாண்மை மற்றும் முழுமையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் போன்ற ஈரானின் முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்க மறுப்பதன் காரணமாக, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளும் தற்போது முட்டுக்கட்டையை எட்டியுள்ளன. ஈரான் […]

அரசியல் இலங்கை செய்தி

கிழக்கு பிரதேச செயலர் நியமனத்தில் ‘இனவாதம்’ – மகரூப் எம்.பி. குற்றச்சாட்டு!

  • May 19, 2026
  • 0 Comments

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிழக்கு மாகாணத்தில் இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருவது கவலையைத் தருகின்றது.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு , “கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக்கொண்ட மாகாணமாகும். எனினும், தமிழ் பேசும் அதிகாரி ஒருவரை கிழக்குக்கு பிரதம செயலாளராக நியமிக்கும் மனநிலை இந்த அரசாங்கத்துக்கு இல்லை. கடந்த அரசாங்கங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

கஜேந்திரகுமார் எம்.பியை விளாசித்தள்ளும் ராஜபக்சவின் சகா!

  • May 19, 2026
  • 0 Comments

தமிழ் மக்களுக்கான நலன்புரி திட்டம் பற்றி கதைப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ புலிகள் வசம் சிக்கி இருந்த 290,000 தமிழ் மக்களை இலங்கை ராணுவமே காப்பாற்றியது. மக்கள் நலன் கருதி கனரக ஆயுதங்களைக்கூட பயன்படுத்தவில்லை. இவ்வாறு மக்களை மீட்டு அவர்களை […]

இலங்கை செய்தி

“பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம்”

  • May 19, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு விதியும் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்படி சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் கலாநிதி அம்பிகா சற்குணநாதன் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த பின்னரே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு சட்ட விளக்கம் அளித்துள்ளது. பிரதம நீதியரசர் பி. பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய […]