இலங்கை செய்தி

“பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம்”

2026 ஆம் ஆண்டின் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு விதியும் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்படி சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் கலாநிதி அம்பிகா சற்குணநாதன் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த பின்னரே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு சட்ட விளக்கம் அளித்துள்ளது.

பிரதம நீதியரசர் பி. பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளது.

நாடாளுமன்றம் இன்று கூடியவேளை உயர்நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை சபாநாயகர், சபைக்கு தெளிவுபடுத்தினார்.

சமகாலத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறு நவீன வடிவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு, இந்தச் சட்டமூலத்தின் 16(3) ஆவது பிரிவு அவசியமானது என்றும், உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகச் சேர்க்கப்படும் நிதிகள் மற்றும் சொத்துக்களைத் தடுப்பதையே இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனவே, இந்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் அமையவில்லை என உயர்நீதிமன்றம் தனது 22 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!