அரசியல் இலங்கை செய்தி

ஆளுங்கட்சி பக்கம் தாவுவாரா ஹர்ஷ டி சில்வா?

  • May 19, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்று அக்கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அரசாங்கத்துடன் இணையவுள்ளார் என வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” தேசிய மக்கள் சக்தி அரசாங்கமென்பது மூழ்கும் கப்பலாகும். அவ்வாறு மூழ்கும் கப்பலில் ஏறுவதற்கு நாம் தயாரில்லை. […]

இலங்கை ஐரோப்பா செய்தி

ஈழத் தமிழர்களுக்கு நீதி: எனது குரல் ஓங்கி ஒலிக்கும்! உமா குமாரன் MP

  • May 19, 2026
  • 0 Comments

“இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்ப முடியாது. அவர்களுக்கான அதனைச் செய்வது உயிருடன் இருப்பவர்களின் கடமையாகும்.” – இவ்வாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் வலியுறுத்தியுள்ளார். 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், இது குறித்து உமா குமாரன் தெரிவித்துள்ளதாவது:- ” மே 18 ஆம் திகதி […]

ஆஸ்திரேலியா கல்வி

எரிபொருள் மற்றும் உரம் கொள்முதல்: சீனா, புரூணையுடன் ஆஸ்திரேலியா அவசர ஒப்பந்தம்!

  • May 19, 2026
  • 0 Comments

ஈரான் போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோகத் தடைகளைச் சமாளிக்க, ஆஸ்திரேலிய அரசு சீனா , புரூணை ஆகிய நாடுகளிடம் இருந்து எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றை கொள்வனவு செய்யவுள்ளது. இதற்குரிய இணக்கப்பாடு எட்டப்பட்டு, உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் சீனப் பிரதமர் லி கியாங் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து 600,000 பெரல்களுக்கும் அதிகமான (சுமார் 100 மில்லியன் […]

இலங்கை செய்தி

சீரற்ற காலநிலை: 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து 300 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 602 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். 221 வீடுகள் பகுதியளவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஆயிரத்து 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் ஆயிரத்து 469 பேரும், களுத்துறையில் ஆயிரத்து […]

ஐரோப்பா

சீனா – ரஷ்யா உறவில் முன்னேற்றம் : புட்டின் நெகிழ்ச்சி!

  • May 19, 2026
  • 0 Comments

தேசிய ஒற்றுமை மற்றும் இறையாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ரஷ்யாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். சீனப் பயணத்திற்கு முன்னதாக காணொளி வாயிலாக இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையின் ‘முன்னெப்போதும் இல்லாத நிலையை’ எட்டியுள்ளதாக கூறியுள்ளார். பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் சமத்துவ அடிப்படையிலான கொள்கைகளில் […]

அரசியல் இலங்கை செய்தி

“தமிழர்களுடன் நாம் மோதவில்லை: புலிகளே எமது எதிரிகள்” – நாமல் ராஜபக்ச!

  • May 19, 2026
  • 0 Comments

“புலிகளுடனேயே எமக்கு பிரச்சினை இருந்தது. தமிழ் மக்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டுவருகின்றோம். எமக்கு தமிழ் உறவினர்களும் உள்ளனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , ” நாட்டில் போர் முடிவடைந்திருந்தாலும், போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்களை பழிவாங்க வேண்டும் என்ற பிரிவினைவாத சிந்தாந்தம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. போர் நிறைவுக்கு வந்த நாளை நாம் நினைவுகூரினாலும் இதற்கு பங்களிப்பு செய்த படையினர் […]

இலங்கை செய்தி

விசா இன்றி திருமலையில் கைதான மூவருக்கு அபராதம்!

  • May 19, 2026
  • 0 Comments

திருகோணமலையில் விசா இன்றி கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மூவருக்கும், தலா ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் குறித்த சந்தேக நபர்கள் நேற்று (18) முற்படுத்தப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கி இருந்தபோது கடந்த 15 ஆம் திகதி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது திருமண நிகழ்வொன்றிற்கு வருகை தந்தனர் என வாக்குமூலம் […]

இலங்கை

சுதந்திரத் தமிழீழம் காண ஐ.நா மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – வைகோ அழைப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

இலங்கையில் தமிழீழம் உருவாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோ தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர்,  “மனிதகுல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் சில நாடுகளில் நடந்த இனப் படுகொலைகளில் மிகவும் கோரமானதும், கொடூரமானதும், நினைத்தாலே நெஞ்சை நடுங்கச் செய்வதுமான படுகொலை முள்ளி வாய்க்கால் தமிழினப் படுகொலை ஆகும். வரலாற்றின் வைகறை காலத்திலிருந்து […]

செய்தி விளையாட்டு

ராஜஸ்தான், லக்னோ அணிகள் இன்று மோதல்!

  • May 19, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்றிரவு நடைபெறும் 64 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6- வது இடத்தில் உள்ளது. playoff சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட […]

உலகம்

சீனாவின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளே அமைதியின்மைக்கு முக்கியக் காரணம் – தைவான் அதிருப்தி!

  • May 19, 2026
  • 0 Comments

சீனாவின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளே பிராந்தியத்தில் அமைதியின்மை மற்றும் ஸ்திரத்தன்மையின்மைக்கும் மிகப்பெரிய காரணமாக உள்ளது என்று தைவானின் பிரதமர் சோ ஜுங்-டாய் (Cho Jung-tai ) தெரிவித்துள்ளார். சீனக் கடற்படை பயிற்சிக்காக ஒரு விமானம் தாங்கி கப்பல் படையை மேற்கு பசிபிக் பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சீன மக்கள் குடியரசு, தைவான் ஜலசந்திப் பகுதி, இந்தோ-பசிபிக் பகுதி, தென் சீனக் கடல் மற்றும் ஜப்பானைச் […]