இலங்கை செய்தி

யாழ்.மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

  • May 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி. அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று (19.05.2026) ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

கிரேக்க பிணைமுறி வழக்கு –  அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • May 19, 2026
  • 0 Comments

கிரேக்க பிணைமுறி வழக்கில் நிபந்தனைகளை மீறியதாகத் தெரிவித்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்ட நிரந்தர விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் குழாத்தில் மனோஜ் தல்கொடபிட்டிய, உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக ஸ்ரீ ராகல ஆகிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்குகின்றனர். கிரேக்க பிணைமுறி வழக்கின் நிபந்தனைகளின் அடிப்படையில், அஜித் நிவாட் […]

ஐரோப்பா செய்தி

சேனல் 4 நிகழ்ச்சியில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் – விசாரணை தீவிரம்

  • May 19, 2026
  • 0 Comments

சேனல் 4-இன் ‘மேரிட் அட் ஃபர்ஸ்ட் சைட்’ (Married at First Sight ) UK நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானியாவின் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைகவலை வெளியிட்டுள்ளது. பிபிசி பனோரமா விசாரணையில், நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது இரண்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும், மற்றொரு பெண் தனது சம்மதம் இல்லாத பாலியல் செயலுக்கு ஆளானதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் நலனில் ஒளிபரப்பாளர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று ஆஃப்காம் தெரிவித்துள்ளது. இந்த […]

இலங்கை செய்தி

ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குங்கள் – அர்ச்சுனா

  • May 19, 2026
  • 0 Comments

தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தங்களின் சுயலாபத்திற்காகத் தமிழினத்தின் வலிகளைப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் தான் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளதாகக் கூறிய அர்ச்சுனா எம்.பி, தமிழ்நாட்டு மக்களுக்கும், தங்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசியல் தலைவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “தமிழ்நாடு […]

ஐரோப்பா செய்தி

எபோலா தொற்றுதிப்பு எண்ணிக்கை 1,000 ஐ கடந்திருக்கலாம் – லண்டன் தொற்று நோய் பகுப்பாய்வு மையம்

  • May 19, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா நோய், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுவரை சுமார்131 பேர் உயிரிழந்துள்ளதுடன், 513 க்கும் மேற்பட்ட தொற்றுகள் சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டை நாடான உகாண்டாவிலும் இந்த நோய் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். லண்டனில் உள்ள எம்ஆர்சி தொற்று நோய் பகுப்பாய்வு மையம் வெளியிட்ட ஆய்வில், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை 1,000 ஐ கடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறியாதது, […]

ஐரோப்பா

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல் – பலர் பலி!

  • May 19, 2026
  • 0 Comments

உக்ரைனின் வடக்குப் பகுதியான செர்னிஹிவ் மற்றும் சுமி பிராந்தியங்களில் ரஷ்யா ஏவுகணை மற்றும் ஆளில்லா ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக உக்ரைனிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் செர்னிஹிவ் (Chernihiv) பிராந்தியத்தில் உள்ள ப்ரைலுகி (Pryluky) நகரின் மையத்தில் நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 14 வயது சிறுவன் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

யாழில் பொலிஸ் விசாரணைக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காகச் சென்ற நபர் ஒருவர், பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த ப. சுரேஷ்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நீண்டகாலமாக வீதி ஒழுங்கை (பாதை) தொடர்பான தகராறு நிலவி வந்துள்ளது. இது தொடர்பாக சுரேஷ்குமார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக இரு தரப்பினரும் […]

அரசியல் இலங்கை செய்தி

“ யாழ்ப்பாணம் வந்தால் சீமானை சுடுவேன்” – நாடாளுமன்றில் அர்ச்சுனா மிரட்டல்!

  • May 19, 2026
  • 0 Comments

” யாழ்ப்பாணம் வந்திருந்தால் சீமானை சுட்டு வீழ்த்தி இருப்பேன்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் . நாம் தமிழர் கட்சியையும், அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அர்ச்சுனா எம்.பி. அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்து வருகின்றார். தமிழகம் சென்றிருந்தவேளைகூட சீமான்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதும் அவர் சீமான்மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்தார். “அண்ணன் சீமான், கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை விமர்சித்திருந்தார். நான் […]

அரசியல் இலங்கை செய்தி

உள்நாட்டுக்குள்ளேயே பிரச்சினையை தீர்க்க சஜித் அழைப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

“மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தமதுரையில் சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு , “யுத்த வெற்றிக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்சவுக்கும், இராணுவத் தளபதியாகத் தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட […]

செய்தி தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க அனுமதி

  • May 19, 2026
  • 0 Comments

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் அனுமதியளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 23 நீதிபதி பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், […]