அரசியல் இலங்கை செய்தி

கிழக்கு பிரதேச செயலர் நியமனத்தில் ‘இனவாதம்’ – மகரூப் எம்.பி. குற்றச்சாட்டு!

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிழக்கு மாகாணத்தில் இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருவது கவலையைத் தருகின்றது.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு ,

“கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக்கொண்ட மாகாணமாகும்.

எனினும், தமிழ் பேசும் அதிகாரி ஒருவரை கிழக்குக்கு பிரதம செயலாளராக நியமிக்கும் மனநிலை இந்த அரசாங்கத்துக்கு இல்லை.

கடந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த கொள்கையையே இந்த அரசாங்கமும் கடைபிடித்துவருகின்றது.

குறிப்பாக பிரதம செயலாளராக இருக்கின்றவர் தற்போது விடுமுறையில் இருக்கின்றார். இதற்கான பதில் நியமனமும் தமிழில் கடமையாற்ற முடியாத ஒருவருக்கே கிழக்கு மாகாண ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் இனவாதமில்லாத நியாயமான ஆட்சியை முன்னெடுப்பதாக ஊடகங்களில் கூறிக் கொண்டாலும் இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை உறுதிப்பத்த கிழக்கு மாகாணத்தில் வழங்கப்படும் இந்த நியமனம் சான்றாகும்.”- என்றுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!