பாதுகாப்பு சிக்கல் – ஹாரி மற்றும் மேகன் தம்பதியர் எடுத்த முடிவு
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோர், புதிய கல்விப் பருவம் தொடங்கிய சில நாட்களிலேயே தங்கள் குழந்தைகளை வேறொரு பாடசாலைக்கு மாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலைக்கு சென்று வருவதில் உள்ள பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விடயத்தை நன்கறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
‘ஹலோ!’ (HELLO!) இதழிடம் பேசிய நபர் ஒருவர், “இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். அவர்கள் அந்த பாடசாலையிலேயே தொடர விரும்பினர்.
அவர்கள் அந்தப் பாடசாலையிலேயே தொடர மிகவும் விரும்பினர். ஆனால், பாடசாலைக்கு சென்று வருவதற்கான பயணத்தை முழுமையான பாதுகாப்புடன் மேற்கொள்ள இயலாது என்ற சூழல் இருந்ததால், அவர்கள் ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டியதாயிற்று.” எனத் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஹாரி மற்றும் மேகன் தங்கள் குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லில்லிபெட்டை பாதுகாப்பு அணிவகுப்புடன் (convoy) பாடசாலைக்கு அழைத்துச் செல்வதிலும் திரும்ப அழைத்து வருவதிலும் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.




