அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சவுதி அரசை நாடி, கோரிக்கை விடுத்த பின், இது தொடர்பில் இந்திய அரசு தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்திய தூதர் சந்தோஷ்-ஜா தம்மை இன்று நேரடியாக சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்தார். இந்தியா இலங்கை செய்தி

அனோஜனுக்காக களமிறங்குவாரா மோடி? மகஜர் கையளிப்பு

  • September 23, 2026
  • 0 Comments

அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சவுதி அரசை நாடி, கோரிக்கை விடுத்த பின், இது தொடர்பில் இந்திய அரசு தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்திய தூதர் சந்தோஷ்-ஜா தம்மை இன்று நேரடியாக சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்தார். அனோஜன் சிவராஜா தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பங்களிப்பை கோரி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இன்று மாலை இந்திய தூதுவரை சந்தித்தது. இதன் […]

கவலையான முகபாவனையுடன் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐரோப்பா

மேற்குக் கரையில் ஹமாஸ் செயல்படவில்லை – மக்ரோனின் கூற்றுக்கு நெதன்யாகு கண்டனம்

  • September 23, 2026
  • 0 Comments

மேற்குக் கரையில் ஹமாஸ் ஒருபோதும் செயல்பட்டதில்லை என்று ஐ.நா பொதுச் சபை உரையின்போது பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறிய கூற்றுகளுக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். பின்னர் பிரான்ஸ் அதிகாரி ஒருவர் மக்ரோனின் கருத்துக்களைத் தெளிவுபடுத்தி, ஹமாஸ் மேற்குக் கரையை ஆளவில்லை என்பதையே ஜனாதிபதி கூற விரும்பினார் என்று தெரிவித்தார். மேற்குக் கரையில் ஹமாஸ் தொடர்ந்து நடத்திவரும் பயங்கரவாதத் தாக்குதல்களையும், சமீபத்தில் ஒரு பிரெஞ்சு-இஸ்ரேலியக் குடிமகன் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டிய நெதன்யாகு மக்ரோனின் கருத்துக்களை […]

யாழ்ப்பாணம், அரியாலை - பூங்கன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று பிற்பகல் ரயில் மோதிய விபத்தில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் மகள் படுகாயமடைந்துள்ளார். இலங்கை செய்தி

ரயில் மோதி தந்தை பலி; மகள் படுகாயம்- யாழில் சோகம்

  • September 23, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், அரியாலை – பூங்கன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று பிற்பகல் ரயில் மோதிய விபத்தில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் மகள் படுகாயமடைந்துள்ளார். பாடசாலையில் இருந்து தனது மகளை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச் சென்ற தந்தையே இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவியான மகள், உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் பணியாளரான […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளுக்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் (Mohamed Nasheed) தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை செய்தி

அனோஜனின் விடுதலைக்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி ஆதரவு

  • September 23, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளுக்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் (Mohamed Nasheed) தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அனோஜன் சார்பிலான இராஜதந்திர முன்னெடுப்பின் முதற்கட்டமாக, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைஸர் முஸ்தபா (Faiszer Musthapha) மற்றும் உபுல் குமாரப்பெரும (Upul Kumarapperuma) ஆகியோர் இன்று புதன்கிழமை மாலைதீவில் நஷீதைச் சந்தத்துப் பேச்சு நடத்தினர். அனோஜன் பதிவிட்ட கருத்துகள் இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை […]

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவிருந்த இரு தரப்புப் பேச்சு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை, இந்திய மீனவர் பேச்சு இடைநிறுத்தம்

  • September 23, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவிருந்த இரு தரப்புப் பேச்சு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்றமை மற்றும் கைது செய்யப்படுகின்றமை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக, இந்தியாவில் நாளைமறுதினம் (25) நடைபெறவுள்ள பேச்சில் பங்கேற்பதற்காக இலங்கைக் தரப்பிலிருந்து அதிகாரிகள் இந்தியா பயணமாகவுள்ளனர் என்று மீன்பிடி அமைச்சர் இ. சந்திரசேகர் இம்மாத ஆரம்பத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். எனினும், […]

இலங்கை

அனோஜனின் விடுதலை தொடர்பான கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

  • September 23, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பிவைப்பதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தேசிய மகா சபை – வடக்கு மாகாண ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண ஒன்றியம் சார்பில் இக்கோரிக்கை மனு, நேற்றைய தினம்  (22) வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. குறித்த […]

ஐரோப்பா

AI-ஆல் ஜனநாயத்திற்கும் ஆபத்து – பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை

  • September 23, 2026
  • 0 Comments

“உண்மைக்கும் புனைவுக்கும், பிரச்சாரத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் பொதுமக்கள் கண்டறிவது கடினமாக இருக்கும் ஒரு சூழல், ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாகும்” என்று பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் குறிப்பிட்டுள்ளார். புதிய ‘தகவல் பாதுகாப்புக்கான தேசிய மையம்’ (National Centre for Information Defence) அமைப்பதற்கான திட்டங்களை பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்னம் அறிவித்திருந்தார். இது தொடர்பில் பிபிசி ரேடியோ 4-இடம் கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சமீப காலத்தில் பிரத்தானியாவிலும், […]

உலகம்

சவூதிக்கு உதவினால் அமெரிக்காவின் நலன்களை தாக்குவோம் – ஹுதி எச்சரிக்கை

  • September 23, 2026
  • 0 Comments

ஏமன் மோதலில் சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக வொஷிங்டன் தலையிட்டாலோ அல்லது பாப் அல்-மண்டாப்  Bab al-Mandab  ஜலசந்தியைத் திறக்க முயன்றாலோ, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நலன்களைத் தாக்குவோம் என்று ஹூதி இராணுவ ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதிகள், செங்கடலுக்கான குறுகிய கப்பல் போக்குவரத்துப் பாதையை செப்டம்பர் மாதம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அதே நேரத்தில், அவர்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் சர்வதேச இராணுவ உதவியை சவூதி அரேபியா கோரியுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

ஐரோப்பா

ரஷ்யாவில் கரடி தாக்குதல்கள் அதிகரிப்பு – 06 பேர் உயிரிழப்பு

  • September 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவில்  கரடித் தாக்குதலால் குறைந்தது 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரந்த சைபீரியப் பகுதியான கிரஸ்னோயார்ஸ்கில் (Krasnoyarsk) கரடி தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளையில், அண்டை பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரத்தை கரடிகள் முற்றுகையிட்டுள்ளதாக  அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடயே கரடிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் உள்ளூர் அதிகாரிகள் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், ‘குற்றவியல் அலட்சியம்’ குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறினர். ரஷ்யாவின் இயற்கை வளங்கள் அமைச்சகத்தின் தரவுகளின்படி, 1990-ல் சுமார் 1,30,000-ஆக இருந்த […]

தென்னாப்பிரிக்காவின் டர்பன் (Durban) நகரில்  குடியிருப்பு பகுதி ஒன்றில் உள்ள வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் செய்தி

கர்ப்பிணி பெண் உட்பட 11 பேர் சுட்டுக்கொலை: தென்னாபிரிக்காவில் பயங்கரம்

  • September 23, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் டர்பன் (Durban) நகரில்  குடியிருப்பு பகுதி ஒன்றில் உள்ள வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்குச் சற்றே முன்னதாக (21:00 GMT) இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வீட்டில் நடைபெற்ற விருந்தொன்றில் மக்கள் ஒன்றுகூடியிருந்த வேளையிலேயே ஆயுததாரிகள் உள்ளே புகுந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்த அனைவரையும் ஒரே அறைக்குள் தள்ளிப் பூட்டி சுட்டுத் தள்ளியதாகவும், பலியான […]