ஐரோப்பா

உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் – அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாரான புட்டின்

  • June 24, 2026
  • 0 Comments

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ( Vladimir Putin) தெரிவித்துள்ளார். ரஷ்ய உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ரஷ்யா அமைதி பேச்சுவார்ததைக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இஸ்தான்புல்லில் முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தொடர வேண்டும் என்றும், அந்த ஒப்பந்தங்களை உக்ரைனிய தூதுக்குழு ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனின் தொடர்சியான தாக்குதல்களால் ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

தொழிலாளர் கட்சித் தலைமை போட்டியில் இருந்து விலகினார் டேரன் ஜோன்ஸ்

  • June 24, 2026
  • 0 Comments

டேரன் ஜோன்ஸ் தொழிலாளர் கட்சித் தலைமைக்கு போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவு உள்ளபோதிலும் வரவு செலவு திட்டத்தை  தயாரிக்கக் கிடைக்கும் நேரம் குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, அவர் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். டேரன் ஜோன்ஸின் இந்த தீர்மானம் ஆண்டி பர்ன்ஹாம் இலகுவாக பிரதமராவதற்கான கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது. இதற்கிடேயே சர் கெய்ர் ஸ்டார்மரின் இராஜினாமாவால் கவலையடைந்த அல்லது மனமுடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தனது பொருளாதாரக் கொள்கைகள் […]

முட்டைகள் , முட்டை சார்ந்த தயாரிப்புகள் உட்பட ஆஸ்திரேலிய கோழிப்பண்ணை தயாரிப்புகள் இறக்குமதி நிறுத்தப்படும் என்று பப்புவா நியூ கினியின் தேசிய விவசாய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வு அதிகாரம் (NAQIA) அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பறவைக் காய்ச்சல் எதிரொலி: ஆஸ்திரேலிய கோழி இறக்குமதிக்கு தடை

  • June 24, 2026
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் பறவைகளிடம் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியாவிலிருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்வதை பப்புவா நியூ கினி (PNG) நாடு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. முட்டைகள் , முட்டை சார்ந்த தயாரிப்புகள் உட்பட ஆஸ்திரேலிய கோழிப்பண்ணை தயாரிப்புகள் இறக்குமதி நிறுத்தப்படும் என்று பப்புவா நியூ கினியின் தேசிய விவசாய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வு அதிகாரம் (NAQIA) அறிவித்துள்ளது. 2024–25 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் 14 லட்சம் டன் கோழி இறைச்சி உற்பத்தி […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியல் இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு குறித்து மஹிந்த அணிக்கு அச்சம்

  • June 24, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இன்னும் ஏற்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் 3 சதவீதத்துக்கு இறங்கிவிடுவோம் என அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனால்தான் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் […]

இலங்கை

கொழும்பின்  புறநகர்ப் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

  • June 24, 2026
  • 0 Comments

கொழும்பின்  புறநகர்ப் பகுதிகளில் இன்று (24)  24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய வடிகால் அமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  இரவு 8.00 மணி முதல் நாளை (25) இரவு 8.00 மணி வரை 24 மணி நேர நீர் விநியோகத் தடை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பதுக்கா, ஹோமகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய மற்றும் பெலன்வத்த ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு ஏற்படும் என்றும், மகாரகம பகுதிக்கு குறைந்த அழுத்த நிலையில் நீர் விநியோகம் செய்யப்படும் […]

IAEA Director-General Rafael Grossi செய்தி

ஈரானில் விரைவில் ஆய்வு: சர்வதேச அணுசக்தி அமைப்பு நம்பிக்கை

  • June 24, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தி மையங்களை, சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்கள் விரைவில் பார்வையிடுவார்கள் என்று அதன் தலைவர் Rafael Grossi நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வுகள் நடைபெறுவது உறுதி என்றாலும், அதற்கான துல்லியமான காலக்கெடு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஆய்வாளர்களை மீண்டும் அழைப்பதற்கு ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா தரப்பில் கூறப்படுவதை அந்த நாடு மறுத்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சு, அணுசக்தி முகமையுடன் தற்போதைக்கு எந்த சந்திப்போ அல்லது ஆய்வு திட்டங்களோ இல்லை என்று […]

ஈரான், ஓமான், அமெரிக்கா , பிராந்தியத்தின் பிற கடலோர நாடுகள் மற்றும் கடல்சார் துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் Arsenio Dominguez தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள 11,000 மாலுமிகளை மீட்க ஐ.நா. திட்டம் வகுப்பு

  • June 24, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரினால் வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள 11,000-க்கும் மேற்பட்ட மாலுமிகளை மீட்பதற்கான பாரிய திட்டத்தை ஐ.நா அறிவித்துள்ளது. ஈரான், ஓமான், அமெரிக்கா , பிராந்தியத்தின் பிற கடலோர நாடுகள் மற்றும் கடல்சார் துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் Arsenio Dominguez தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரானுக்கிடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர கடந்த வாரம் தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் […]

இந்தியா

லக்னோ தீவிபத்து – நால்வர் கைது, 6 பேர் மீது வழக்கு பதிவு

  • June 24, 2026
  • 0 Comments

இந்தியா – லக்னோவில் உள்ள மூன்று மாடிக் கட்டிடத்தில்  ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ள விவகாரம் தொடர்பில் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக மக்கள் அடர்த்தி கொண்ட அலிகஞ்ச் பகுதியில், செல்லப்பிராணிகள் கடை மற்றும் அனிமேஷன் 3டி கேமிங் மையம் இயங்கி வந்த கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 07 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, இதுகுறித்து […]

தர்மன் படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தி பொழுதுபோக்கு

ரஜினியின் 173வது படத்தின் பெயர் அறிவிப்பு

  • June 24, 2026
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு சங்கமித்துள்ளமை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். தர்மன் படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை அதிகரிக்க தீர்மானம்

  • June 24, 2026
  • 0 Comments

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைப்ரிட் கார்கள் மீதான  வரிகளை அதிகரிக்க ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவைச் சார்ந்திருக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பதே இந்த வரி விதிப்பிற்கான நோக்கமாகும். இதற்கமைய உறுப்பு நாடுகளிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த வரியை விதிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் தயார் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. சீனாவுடனான தற்போதைய வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், அரிய கனிமங்கள் உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருட்களுக்காக உலகின் இரண்டாவது பெரிய […]