Portugal's Cristiano Ronaldo celebrated in his signature style after scoring against Uzbekistan செய்தி விளையாட்டு

6 உலகக் கோப்பைத் தொடர்களிலும் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை

  • June 24, 2026
  • 0 Comments

உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை அடித்து, உலகக்கிண்ண தொடரில் கோல் வேட்டையை ஆரம்பித்துள்ளார் ரொனால்டோ. ரொனால்டோவின் ஆட்டம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், கோல் அடிப்பதில் தனக்கிருக்கும் அபார திறமை இன்னும் குறைந்துவிடவில்லை என்பதை இதன்மூலம் ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதில் முதல் பாதியில் ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தார். இது அவருக்கும், அவரது அணிக்கும் பெரும் நிம்மதியை […]

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி இடைநிறுத்தம்

  • June 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுச் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 19 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினத்தில் புதிய எலும்புக்கூடுகள் எதுவும் அடையாளம் காணப்படாத போதிலும், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளே இவ்வாறு முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 32ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று யாழ். நீதிவானின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டன. நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 19 மனித எலும்புக்கூடுகளில், மூன்று சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இங்கிலாந்தின் முதல் ஏஐ வழக்குறைஞர் – சாதகமாக வந்த தீர்ப்பு

  • June 23, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் முதல் முறையாக நீதிமன்ற நடவடிக்கையில் வழக்குறைஞராக ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுயதொழில் செய்யும் மனிதவள ஆலோசகரான டாமிரெஸ் கமால் டகுய்டிர், செலுத்தப்படாத £7,000 கடனுக்காக ஒரு சட்டப்பூர்வ கடிதத்தை அனுப்பவும், பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடங்கவும், கார்ஃபீல்ட் ஏஐ (Garfield AI) என்ற நிறுவனத்தை நாடினார். வழக்குச் செலவுகள்,  வெல்லக்கூடிய பணத்தை விட அதிகமாக இருப்பதால், நீதிமன்றத்தில் வாடிக்கையாளருக்காக வாதிட Garfield  நிறுவனம் ஒரு மனித வழக்கறிஞரை நியமித்தது. விசாரணைக்கு முந்தைய அனைத்து சட்டப் பணிகளையும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வார நாட்களில் தடைப்படும் ரயில் சேவைகள்

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலைக்கு உரிய சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அவசியமானால் மட்டுமே ரயில் பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தேம்ஸ்லிங்க் (Thameslink), கிரேட் நார்தர்ன் (Great Northern) மற்றும் சதர்ன் (Southern) சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் அவசியம் என்றால் மட்டுமே ரயில் பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வேகக் கட்டுப்பாடுகள் காரணமாக, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சேவைகள் குறைக்கப்படும் […]

இலங்கை

அனில் ஜயந்த பெர்னாண்டோ – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு

  • June 23, 2026
  • 0 Comments

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (23)  பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, காத்தான்குடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள், மக்களின் அடிப்படைத் தேவைகள், பொதுச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் பிரதேசத்தின் நிலையான முன்னேற்றம் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், காத்தான்குடி நகர சபையின் […]

உலகம்

ஆசியாவில் சிறந்த போர் நாடாக” மாறி வரும் ஜப்பான் – வடகொரியா கண்டனம்

  • June 23, 2026
  • 0 Comments

ஜப்பான் ஒரு “போர் நாடாக” மாறி வருவதை வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார். அதேநேரம் பியோங்யாங்கின் இராணுவப் பாதுகாப்பை விரிவுபடுத்தவும் கிம் அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான், தற்போதைய குழப்பமான சூழ்நிலைகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, தன்னை ஒரு இராணுவ சக்தியாக மாறுவதைத் தடுக்கும் அனைத்துத் தடைகளையும் அகற்றி போர் நாடாக உருவெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் சனே டகாயிச்சியின் ( Sanae Takaichi)  கீழ், ஜப்பான் தனது சமாதானக் கொள்கையிலிருந்து விலகியுள்ளது. […]

இஸ்லாமாபாத் நகரில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதியை , பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பல அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாகிஸ்தானில் களமிறங்கினார் ஈரான் ஜனாதிபதி

  • June 23, 2026
  • 0 Comments

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் கடந்த பெப்ரவரி மாதம் ஏற்பட்ட போருக்கு பின்னர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இன்று (24) பாகிஸ்தான் சென்றுள்ளார். இஸ்லாமாபாத் நகரில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதியை , பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பல அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர். ஈரான் ஜனாதிபதியுடன்அந்நாட்டு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்றும் இப்பயணத்தில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கார்மார்த்தன்ஷையரில் (Carmarthenshire) உள்ள கிட்வெல்லியில் (Kidwelly) பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கிட்வெல்லி சுற்றுச்சாலைக்கு அருகில் உள்ள A484 சாலையில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 26 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் அவசர சேவையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி விபத்தை  தொடர்ந்து அப்பகுதியூடான போக்குவரத்து தடை பட்டுள்ளது. ஓட்டுநர்கள் மாற்று வழியை பின்பற்றுமாறு வேல்ஸ் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இந்த விரிவான தொடர்பாடல் அமைப்பு, இலங்கை கடற்படையின் கடலோரக் கண்காணிப்புக் கப்பல்களில் (OPVs) நிறுவப்படவுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை கடற்படைக்கு செயற்கைகோள் தொடர்பாடல் அமைப்பு கையளிப்பு

  • June 23, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படையின் கடல்சார் இணைப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்கா மேம்பட்ட Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை இலங்கை கடற்படைக்கு (SLN) கையளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஜூன் 22 கொழும்புத் துறைமுகத்தில் SLNS கஜபாஹு கப்பலில் நடைபெற்ற விசேட வரவேற்பு நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் துறை உதவி செயலாளர் […]

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அரசியல் இலங்கை செய்தி

‘இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைவடைந்துள்ளது’

  • June 23, 2026
  • 0 Comments

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: “கரைவலை மீன்பிடி என்பது ஒரு பாரம்பரிய முறைமையாகும். அந்த முறைமை இலங்கையில் தடை செய்யப்படவில்லை; அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எனினும், உழவு […]