உலகம்

சவூதிக்கு உதவினால் அமெரிக்காவின் நலன்களை தாக்குவோம் – ஹுதி எச்சரிக்கை

ஏமன் மோதலில் சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக வொஷிங்டன் தலையிட்டாலோ அல்லது பாப் அல்-மண்டாப்  Bab al-Mandab  ஜலசந்தியைத் திறக்க முயன்றாலோ, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நலன்களைத் தாக்குவோம் என்று ஹூதி இராணுவ ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதிகள், செங்கடலுக்கான குறுகிய கப்பல் போக்குவரத்துப் பாதையை செப்டம்பர் மாதம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

அதே நேரத்தில், அவர்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் சர்வதேச இராணுவ உதவியை சவூதி அரேபியா கோரியுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்தே ஹுதிகளின் ஆலோசகர் மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய “அமெரிக்கா தனது கடற்படைகளைக் கொண்டு இராணுவ ரீதியாகத் தலையிடத் துணிந்தாலோ அல்லது பாப் அல்-மண்டாப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றாலோ, அது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு சிவப்பு கோடு… நாங்கள் அதற்காகப் போராடுவோம்,” என்று அவர் தெரிவித்தார்.

ஹூதிகளின் இந்த முற்றுகை, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி அரேபியாவை பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்