ஐரோப்பா

ரஷ்யாவில் கரடி தாக்குதல்கள் அதிகரிப்பு – 06 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில்  கரடித் தாக்குதலால் குறைந்தது 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரந்த சைபீரியப் பகுதியான கிரஸ்னோயார்ஸ்கில் (Krasnoyarsk) கரடி தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளையில், அண்டை பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரத்தை கரடிகள் முற்றுகையிட்டுள்ளதாக  அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடயே கரடிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் உள்ளூர் அதிகாரிகள் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், ‘குற்றவியல் அலட்சியம்’ குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறினர்.

ரஷ்யாவின் இயற்கை வளங்கள் அமைச்சகத்தின் தரவுகளின்படி, 1990-ல் சுமார் 1,30,000-ஆக இருந்த ரஷ்யாவின் பழுப்பு நிறக் கரடிகளின் (brown bear) எண்ணிக்கை, 2026-ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 3,08,000-ஆக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்