மேற்குக் கரையில் ஹமாஸ் செயல்படவில்லை – மக்ரோனின் கூற்றுக்கு நெதன்யாகு கண்டனம்
மேற்குக் கரையில் ஹமாஸ் ஒருபோதும் செயல்பட்டதில்லை என்று ஐ.நா பொதுச் சபை உரையின்போது பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறிய கூற்றுகளுக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பின்னர் பிரான்ஸ் அதிகாரி ஒருவர் மக்ரோனின் கருத்துக்களைத் தெளிவுபடுத்தி, ஹமாஸ் மேற்குக் கரையை ஆளவில்லை என்பதையே ஜனாதிபதி கூற விரும்பினார் என்று தெரிவித்தார்.
மேற்குக் கரையில் ஹமாஸ் தொடர்ந்து நடத்திவரும் பயங்கரவாதத் தாக்குதல்களையும், சமீபத்தில் ஒரு பிரெஞ்சு-இஸ்ரேலியக் குடிமகன் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டிய நெதன்யாகு மக்ரோனின் கருத்துக்களை நிராகரித்துள்ளார்.
மக்ரோன் ஆற்றிய உரையில், காசா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.
அத்துடன் அண்டை நாடுகளின் இறையாண்மையை மீறுவது இஸ்ரேலின் எதிர்காலப் பாதுகாப்பைப் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.




