இலங்கை

அனோஜனின் விடுதலை தொடர்பான கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பிவைப்பதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

தேசிய மகா சபை – வடக்கு மாகாண ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண ஒன்றியம் சார்பில் இக்கோரிக்கை மனு, நேற்றைய தினம்  (22) வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த மனுவில், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையொருவரின் நிலைமை அவரது குடும்பத்தினருக்கும் உயிரின் பெறுமதியை மதிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் உடனடி மற்றும் கருணையுடனான கவனத்தை செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்துடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் இராஜதந்திர, சட்ட மற்றும் மனிதாபிமான வழிமுறைகளின் ஊடாகச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தண்டனையைத் தளர்த்துதல், மாற்றுதல் அல்லது அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்கான சட்டபூர்வ நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி செய்யவேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், இதனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு உடனடியாக அனுப்பிவைத்து, உரிய கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்