ஐரோப்பா

ஏதென்ஸில் 06 பேரை பலிகொண்ட வெடி விபத்து – 03 பேர் கைது

ஏதென்ஸில் கடந்த மாதம் எரிவாயு கசிவால் 06 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு காரணமான மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்பு எரிவாயுக் குழாய்களைத் திருடியதால் ஏற்பட்ட கசிவே வெடி விபத்திற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இரு கிரேக பிரஜைகள் மற்றும் ஒரு அல்பேனிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விசாரணையைத் தொடர்ந்து, வெடிப்பு நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சந்தேக நபர்கள் செப்புக் குழாய் பாகங்களை அகற்றியபோது, ​​இரண்டு மாடிக் கட்டிடத்தின் பிரதான இயற்கை எரிவாயு விநியோக உள்கட்டமைப்பைச் சேதப்படுத்தியுள்ளாக தீயணைப்புப் படையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிபுணர்கள், தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குடியிருப்பாளர்களில் ஒருவர் அதிகாலையில் விளக்கை எரியவிட்டபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் மூவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்