உலகம்

அமெரிக்காவிற்கு தலைவலியாக மாறிய ஈரான் போர் – 81 விமானங்கள் அழிவு

  • October 8, 2026
  • 0 Comments

இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ Operation Epic Fury மோதலின் போது,சுமார்  3.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள 81 விமானங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணப்படுத்தப்பட்ட விமான இழப்புகளில், அதிக விலை கொண்ட F-35A போர் விமானம், ஒரு E-3 சென்ட்ரி மற்றும் ஏராளமான MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்கள் ஆகியவை அடங்குவதாக […]

ஐரோப்பா

உக்ரைனில் பொதுமக்கள் பேருந்தின் மீது குண்டுதாக்குதல் – 30 பேர் பலி

  • October 8, 2026
  • 0 Comments

கிழக்கு உக்ரைனிய நகரமான கிரெமடோர்ஸ்கில் Krematorsk பயணிகள் பேருந்து ஒன்று வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்ததாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுதாக்குதல் ரஷ்யாவால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் ஆளில்லா விமான தாக்குதல் காரணமாக மீட்பு பணிகளிலும் சிக்கல் நிலவியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒருநாளிற்கு முன்பு  உக்ரைனின் வடக்கு நகரமான ப்ரைலுகியில் Pryluky  நடந்த மற்றொரு ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 […]

ஐரோப்பா

இஸ்தான்புல்லில் 07 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

  • October 8, 2026
  • 0 Comments

துருக்கி – இஸ்தான்புல்லின் மால்டெப் மாவட்டத்தில் உள்ள ஏழு மாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் மூன்று தளங்கள் இடிந்து விழுந்துள்ளன. இன்று அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தடுத்து நின்ற மேல் தளங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பாளர்களை வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளனர். அதேநேரம் அவசரகாலக் குழுவினர் தேடுதல் நாய்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் ஒலி கேட்கும் கருவிகளைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கையை  முன்னெடுத்து வருவதாகவும் […]

ஐரோப்பா

இத்தாலியின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்

  • October 8, 2026
  • 0 Comments

இத்தாலியின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் மீது இணையவழித் தாக்குதல் (cyber attack) நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு  அமைச்சகம்  இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களின் இணையதளங்கள் மீதும் இது போன்ற தாக்குதல்கள் நடத்த முயற்சிக்கப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

ரஷ்யாவுக்கு உதவும் நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை – பிரித்தானியா அறிவிப்பு

  • October 8, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி அல்லது போக்குவரத்து, ராணுவத் தளவாட உற்பத்திக்கு உதவுதல் மற்றும் நிதிச் சேவை தொடர்பான தடைகளைத் தவிர்த்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பிரித்தானிய வெளியுறவுத்துறை புதிய தடைகளை அறிவித்துள்ளது. இதற்கமைய புதிதாக 38 தடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் போருக்கான நிதியுதவி மற்றும் தளவாடங்களை வழங்கும் ரஷ்யாவின் திறனைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொஸ்கோவின் போர் சார்ந்த பொருளாதாரத்தைத் தக்கவைக்கும் எண்ணெய் வருவாய், […]

உலகம்

ஹோர்முஸ் வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து – உடன்பாட்டை எட்டியதாக அறிவிப்பு

  • October 8, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளை அமைப்பதற்கு ஓமானும் ஈரானும் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஒரு கூட்டு முன்மொழிவு சர்வதேச சமூகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி  (Esmaeil Baghaei)  தெரிவித்துள்ளார். பிராந்திய அமைதி மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இரு நாடுகளும் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தச் சிறப்பு முன்மொழிவு, […]

உக்ரைனுக்கான தனது தூதுவரை திரும்பப் பெறவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் ராஜதந்திர மோதலின் உச்சக்கட்டமாக இந்நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இலங்கை செய்தி

உக்ரைன், தென்கொரியாவுக் கிடையில் ‘ராஜதந்திரப் போர்’

  • October 8, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கான தனது தூதுவரை திரும்பப் பெறவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் ராஜதந்திர மோதலின் உச்சக்கட்டமாக இந்நடவடிக்கை பார்க்கப்படுகிறது. ரஷ்யாவிற்கு ஆதரவாக போரில் ஈடுபட்டபோது பிடிபட்ட இரு வடகொரிய வீரர்களை தென்கொரியாவிடம் ஒப்படைத்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கடந்த மாதம் அறிவித்ததிலிருந்தே இந்த மோதல் வெடித்தது. இந்த ஒப்படைப்பு விவகாரத்தை இரகசியமாக வைப்பதாக உக்ரைன் செய்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக தென்கொரியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், அவ்வாறு எந்தவொரு இரகசியப் பாதுகாப்பு ஒப்பந்தமும் […]

இலங்கை

16 முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ளனர் -பிரதி அமைச்சர்

  • October 8, 2026
  • 0 Comments

அக்டோபர் 2024 மற்றும் அக்டோபர் 2026 ஆகிய காலப்பகுதியில் விசாரிக்கப்பட்ட லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளில், 16 முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக பொதுப் பாதுகாப்புத் துறைக்கான பிரதி அமைச்சர் சுனில் வதாகல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இக்காலப்பகுதியில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கையாளப்பட்ட வழக்குகளில் மூன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், ஒரு முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களின் […]

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் இன்று (08) விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இலங்கை செய்தி

சிறைச்சாலை கட்டளைச்சட்டம் திருத்தம்: விசேட குழு நியமனம்

  • October 8, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் இன்று (08) விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. மூன்று நிக்காயாக்களின் மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையே இன்று (08) நண்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின்படி இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் […]

இத்தாலியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான கட்டமைப்பை வழங்கும் வகையில், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியால் (Giorgia Meloni) கொண்டுவரப்பட்ட தீவிர விவாதத்திற்குரிய தேர்தல் சீர்திருத்த சட்டமூலத்துக்கு அந்நாட்டின் நாடாளுமன்றக் கீழவை வியாழக்கிழமை (08) இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பா செய்தி

தேர்தல் சட்ட திருத்தத்துக்கு இத்தாலி நாடாளுமன்றம் ஒப்புதல்

  • October 8, 2026
  • 0 Comments

இத்தாலியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான கட்டமைப்பை வழங்கும் வகையில், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியால் (Giorgia Meloni) கொண்டுவரப்பட்ட தீவிர விவாதத்திற்குரிய தேர்தல் சீர்திருத்த சட்டமூலத்துக்கு அந்நாட்டின் நாடாளுமன்றக் கீழவை வியாழக்கிழமை (08) இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பதே இந்நியமங்களின் நோக்கம் என பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார். இருப்பினும், தேர்தலில் தனது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலேயே இச்சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இடதுசாரி எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இதில், […]