ஐரோப்பா

இஸ்தான்புல்லில் 07 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

துருக்கி – இஸ்தான்புல்லின் மால்டெப் மாவட்டத்தில் உள்ள ஏழு மாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் மூன்று தளங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இன்று அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தடுத்து நின்ற மேல் தளங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பாளர்களை வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளனர்.

அதேநேரம் அவசரகாலக் குழுவினர் தேடுதல் நாய்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் ஒலி கேட்கும் கருவிகளைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கையை  முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியாளர்கள் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேரைக் காப்பாற்றியுள்ளனர். மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த ஆறு வயதுக் குழந்தை உட்பட பலருடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இடம் மிகவும் உறுதியற்றதாக இருப்பதால், சிறப்பு மீட்புப் பிரிவுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும், தங்கள் அணுகுமுறையை மாற்றியமைத்து வருவதாகவும் இஸ்தான்புல் ஆளுநர் தாவூத் குல் Davut Gül  தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்