உலகம்

அமெரிக்காவிற்கு தலைவலியாக மாறிய ஈரான் போர் – 81 விமானங்கள் அழிவு

இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ Operation Epic Fury மோதலின் போது,சுமார்  3.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள 81 விமானங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணப்படுத்தப்பட்ட விமான இழப்புகளில், அதிக விலை கொண்ட F-35A போர் விமானம், ஒரு E-3 சென்ட்ரி மற்றும் ஏராளமான MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்கள் ஆகியவை அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மோதலுக்கான அமெரிக்காவின் ஒட்டுமொத்த செலவினம் 33.4 பில்லியன் டொலர் முதல் 45 பில்லியன் டொலர் வரை எட்டியுள்ளதாகவும்  மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஹோர்முஸ் ஜலசந்தி மீதான முற்றுகையால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவு மற்றும் 19 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தது ஆகியவை உயிரிழப்புகளில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்