இலங்கை

பம்பலப்பிட்டியவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து

  • October 14, 2026
  • 0 Comments

பம்பலப்பிட்டியவின் கேஸில் லேன் (Castle Lane) பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றின் நான்காவது மாடியில் உள்ள வீடொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மின் கசிவு (electrical short circuit) காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பம்பலப்பிட்டிய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்வம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

அமெரிக்கா மீதான எதிர்காலத் தாக்குதல்கள் – மீண்டும் கிரீன்லாந்துக்கு குறிவைக்கும் ட்ரம்ப்

  • October 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை கிரீன்லாந்து “ஈடு இணையற்றது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா மீதான எதிர்காலத் தாக்குதல்கள் அனைத்தும் இந்த ஆர்க்டிக் தீவின் வழியாகவே வரக்கூடும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் தனது உண்மைத் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தற்காப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு நோக்கத்தின் அடிப்படையில், கிரீன்லாந்து ஈடு இணையற்றது. அமெரிக்கா மீதான எதிர்காலத் தாக்குதல்கள் கிரீன்லாந்து […]

சவூதியின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் அந்நாட்டுக்கு பாகிஸ்தான் முழுமையான ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif உறுதியளித்துள்ளார். உலகம் செய்தி

சவூதிக்கு படைகளை அனுப்ப தயாராகும் பாகிஸ்தான்

  • October 14, 2026
  • 0 Comments

சவூதியின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் அந்நாட்டுக்கு பாகிஸ்தான் முழுமையான ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif உறுதியளித்துள்ளார். சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தான மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேற்படி நாடுகளின் புதிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் Nauman Mahmood உடனான சந்திப்பின் போது பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் […]

“சட்டத்தின் பிரகாரம் தனிநபர்களுக்குத் தண்டனை வழங்கலாம். ஆனால் துறவற ஆடைக்குத் தண்டனை வழங்கப்படக் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்” – என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

ஞானசார தேரர் எனது நண்பன்: அமைச்சரின் சர்ச்சை கருத்து

  • October 14, 2026
  • 0 Comments

“சட்டத்தின் பிரகாரம் தனிநபர்களுக்குத் தண்டனை வழங்கலாம். ஆனால் துறவற ஆடைக்குத் தண்டனை வழங்கப்படக் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்” – என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ஞானசார தேரர் எனது நண்பர், ஆனால் நாட்டில் சட்டம் உள்ளது. அச்சட்டம் எம்மால் உருவாக்கப்பட்டதும் அல்ல; எம்மால் ஞானசார தேரருக்கு இந்த நிலை ஏற்படவும் இல்லை. ஞானசார தேரர் ஒரு நல்ல மனிதர். அவரை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்திக் […]

"பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் பயன்படுத்த மாட்டோம். அச்சட்டத்தின் ஊடாக மக்களின் உரிமைகளைப் பறிக்கும் எண்ணம் எதுவும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை செய்தி

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தின் நோக்கம் என்ன?

  • October 14, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் பயன்படுத்த மாட்டோம். அச்சட்டத்தின் ஊடாக மக்களின் உரிமைகளைப் பறிக்கும் எண்ணம் எதுவும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பயங்கரவாதத் தடைச்சட்டம் […]

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்வாகவே வைத்திருக்கவும், அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தவும் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களை இலக்கு வைக்க ஈரான் புதிய உத்திகளைக் கையாண்டு வருவதாக இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க இடைத்தேர்தல்: ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ஈரான் வைத்துள்ள ‘செக்’

  • October 14, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்வாகவே வைத்திருக்கவும், அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தவும் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களை இலக்கு வைக்க ஈரான் புதிய உத்திகளைக் கையாண்டு வருவதாக இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை நிறுவ ஈரான் முயன்று வருகிறது. போருக்கு முன்னர் உலகளாவிய எண்ணெய் […]

இலங்கை

பசிலுக்கு பிடியாணை!

  • October 14, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கான பிடியாணை ஒன்றை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் (Sri Lanka Tourism Promotion Bureau) நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக ,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்டர்போல் (Interpol) ஊடாக ‘சிவப்பு அறிவித்தலை’ (Red Notice) பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு நீதவான் […]

சவூதி அரேபியாவில் இலங்கையரான அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அறிவித்துள்ளார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து: சவூதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  • October 14, 2026
  • 0 Comments

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபிய உயர்நீதிமன்றம் நேற்று (13) ரத்து செய்துள்ளது. இந்த தகவலை பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திரா இன்று (14) உறுதிப்படுத்தினார். சவூதி அரேபியாவில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு பின்னர், 2026 ஒக்டோபர் 11 ஆம் திகதி, அனோஜன் சார்பில் சவூதி அரேபிய உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேன்முறையீட்டைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டு […]

5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியா வரும் அமெரிக்க ராஜாங்க செயலர் மார்கோ ரூபியோ, மும்பை மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியா செய்தி

5 நாள் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க ராஜாங்க செயலாளர்

  • October 14, 2026
  • 0 Comments

5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியா வரும் அமெரிக்க ராஜாங்க செயலர் மார்கோ ரூபியோ, மும்பை மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டாவது முறையாக இந்தியா வரும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர், இந்தப் பயணத்தின் போது, இந்திய அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு ஆலோசனைகளில் ஈடுபடவுள்ளார். இதன்போது, இந்தியா – அமெரிக்கா இடையிலான உத்திசார் இராஜதந்திர உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள், […]

உக்ரைன் மீதான ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்துக் கியீவ் (Kyiv) எச்சரித்துள்ள நிலையிலும், தாம் உக்ரைனுடன் உளவுத் தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைனுக்கான உளவுத்துறை உதவி தொடர்கிறது: ட்ரம்ப்

  • October 14, 2026
  • 0 Comments

உக்ரைன் மீதான ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்துக் கியீவ் (Kyiv) எச்சரித்துள்ள நிலையிலும், தாம் உக்ரைனுடன் உளவுத் தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த எரிசக்தி போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறிவிட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. தலைநகர் கியீவ் மீது ரஷ்யப் படைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி, வெப்ப மின் நிலையம் ஒன்றை இலக்கு வைத்துள்ளதாக உக்ரைன் […]