இலங்கை செய்தி

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தின் நோக்கம் என்ன?

"பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் பயன்படுத்த மாட்டோம். அச்சட்டத்தின் ஊடாக மக்களின் உரிமைகளைப் பறிக்கும் எண்ணம் எதுவும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் பயன்படுத்த மாட்டோம். அச்சட்டத்தின் ஊடாக மக்களின் உரிமைகளைப் பறிக்கும் எண்ணம் எதுவும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என நாம் உறுதியளித்தோம். அதனைச் செய்வதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோல, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்குரிய சட்ட ஏற்பாடுகளும் அவசியமாகும். அதற்கேற்ற வகையிலேயே புதிய சட்டம் இயற்றப்படுகின்றது.

பயங்கரவாதி என முத்திரைகுத்தி சாதாரண மக்களை ஒடுக்கும் திட்டம் எம்மிடம் இல்லை. மக்களின் உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை முடக்கும் எவ்வித நோக்கமும் எமக்குக் கிடையாது. எனவே, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட ஏற்பாடு குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

ஜனநாயகம், மனித உரிமை, நாட்டின் பாதுகாப்பு என அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதாளக் குழுக்களை ஒடுக்குவதற்குரிய சட்டமூலமும் தயாரிக்கப்பட்டு வருகின்றது” – என்றார் நளிந்த ஜயதிஸ்ஸ.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை