உலகம் செய்தி

சவூதிக்கு படைகளை அனுப்ப தயாராகும் பாகிஸ்தான்

சவூதியின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் அந்நாட்டுக்கு பாகிஸ்தான் முழுமையான ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif உறுதியளித்துள்ளார்.

சவூதியின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் அந்நாட்டுக்கு பாகிஸ்தான் முழுமையான ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif உறுதியளித்துள்ளார்.

சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய
நாடுகளுக்கு இடையே கையெழுத்தான மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேற்படி நாடுகளின் புதிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் Nauman Mahmood உடனான சந்திப்பின் போது பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், சவூதி அரேபியாவிற்குப் படைகளை விரைவாக அனுப்பவும் துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆகியவை கடந்த மாதத் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டன.

பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலான Mahmood இந்த ஒப்பந்தக் கட்டமைப்பின் கீழ் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வியூகம் குறித்துப் பிரதமர் ஷெரீப்புக்கு விளக்கமளித்ததாகப் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி