இலங்கை

கொஸ்கொடவில் துப்பாக்கிச்சூடு

  • September 6, 2026
  • 0 Comments

கொஸ்கொட பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கொஸ்கொட தாரகா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் ஒருவரைக் குறிவைத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 மி.மீ. துப்பாக்கியைக் கொண்டு இருமுறை சுட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் இரு முறையும் துப்பாக்கி வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து கொஸ்கொட பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க கடல்சார் ஆணையத்தின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வருகை இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க கடல்சார் ஆணையத்தின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வருகை

  • September 6, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ரொபேர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் ஐந்து நாள் பயணத்தின் போது, ​​இலங்கையின் மூத்த அரசாங்க மற்றும் கடல்சார் தலைவர்களைச் சந்திக்கவுள்ளனர். “நம்மைச் சுற்றியுள்ள உலகைக் கட்டமைத்தல்” என்ற கருப்பொருளின் கீழ், கொழும்பில் உள்ள ரடிசன் ப்ளூ விடுதியில் செப்ரெம்பர் 9 முதல் 11 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 8வது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் தளவாட […]

ஐரோப்பா

அமைதி பேச்சுவார்த்தை – மொஸ்கோவில் அமெரிக்க தூதர்கள்

  • September 6, 2026
  • 0 Comments

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் வேகம் பெற்று வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துள்ளனர். ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை புட்டின் வரவேற்கும் காட்சிகளை கிரெம்ளின் வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர்களை வரவேற்கும்போது தற்போதைய நிலமை அவ்வளவு எளிதானது அல்ல என்றும், “நாங்கள் இந்த நிலைமையை எப்படிப் பார்க்கிறோம்” என்பதை ரஷ்யா விளக்கும் என்றும் புட்டின் தெரிவிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. மூன்று நாட்களுக்கு […]

உலகம்

கலப்பினப் போரை நேட்டோ நாடுகள் பொறுத்துக்கொள்ளக் கூடாது – மேத்யூ

  • September 5, 2026
  • 0 Comments

நேட்டோ உறுப்பு நாடுகள் வேண்டுமென்றே நடத்தப்படும் கலப்பினப் போர் நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்று அமெரிக்கத் தூதர் மேத்யூ விட்டேக்கர் Matthew Whitaker தெரிவித்துள்ளார். இத்தாலியில் நடந்த ஒரு வணிக மாநாட்டில் பேசிய அவர், இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஜெர்மனியின் லீப்ஜிக்/ஹாலே விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் முயற்சி, மற்றும் உக்ரைன் மீதான தாக்குதலில் பிற ஐரோப்பிய நாடுகளை ஊடுருவிய ட்ரோன்கள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.   […]

ஐரோப்பா

பெர்லினில் 02 அரச துறை மீது சைபர் தாக்குதல்

  • September 5, 2026
  • 0 Comments

பெர்லினில் அரசின் இரண்டு துறைகளை குறிவைத்து இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரான்சம்வேர் குழுவால் வெளியிடப்பட்ட திருடப்பட்ட தரவுகளின் தொகுப்பை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக பெர்லின் மாநில அரசு இன்று அறிவித்தது. செப்டம்பர் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த இணையவழித் தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது. கசிந்த தரவுகளின் ஆய்வு, சரிபார்ப்பு மற்றும் மதிப்பீட்டை ஒரு மத்திய நெருக்கடிப் பிரிவு மேற்பார்வையிடும் என்றும், பாதிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்குத் தகவல் தெரிவிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் […]

உலகம்

ஈரானில் எரிபொருள் டேங்கர் லொறி விபத்து -10 பேர் உயிரிழப்பு

  • September 5, 2026
  • 0 Comments

ஈரானில் நெடுஞ்சாலை ஒன்றில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி வெடித்ததில், குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் அரசு ஊடகங்கள் இன்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமேதான்-சனந்தாஜ் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த லொறியில் பிரேக்கிங் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் குறித்த டேங்கர் தீப்பிடித்தமையால் 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 06 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் […]

உலகம்

பெருவில் உள்ள சிறைகளில் அவசரநிலை பிரகடனம்

  • September 5, 2026
  • 0 Comments

பெருவில் உள்ள சிறைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 05 சிறைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறை பாதுகாப்பை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இராணுவம், மற்றும் காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதியில் பதவியேற்ற ஜனாதிபதி கெய்கோ ஃபுஜிமோரியின் அரசாங்கத்தால் இதற்கான ஆணையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. சிறைகளுக்கு உள்ளிருந்து வெளியை நோக்கி செயல்படும் குற்ற அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள சிறையில் குற்ற அமைப்புகளுடன் தொடர்புடைய கைதிகளில் சுமார் 50 சதவீதமானோர் உள்ளதாக […]

உலகம்

எல்நினோ தாக்கம் – 11 ஆண்டுகளுக்கு பின் பசிபிக் கடலில் உருவாகும் சூறாவளிகள்

  • September 5, 2026
  • 0 Comments

எல்நினோ வானிலை நிகழ்வால் பசிபிக் பெருங்கடலில் 03 சூறாவளிகள் உருவாகியுள்ளன. இந்த நிகழ்வானது 11 ஆண்டுகளுக்கு பின்பு இடம்பெறுகிறது. இந்தப் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ஹவாய் தீவுகளுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை எல்நினோ தாக்கத்தால் சீனாவில் 07 ஆவது முறையாக சூறாவளி ஏற்பட்டுள்ளது. தற்போது சௌடல் சூறாவளி, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் ஐரோப்பிய நாடுகள் வறண்ட வானிலை மற்றும் கடுமையான வெப்பம் ஏற்பட்ட ஏராளமானோர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. […]

இலங்கை

சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீர் விலைகளை குறைக்க தீர்மானம்

  • September 5, 2026
  • 0 Comments

சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீர் விலைகளை 05 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அகில இலங்கை உணவகம் மற்றும் மதுக்கூட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன், எதிர்காலத்தில் மூலப்பொருட்களின் விலைக் குறைப்பைப் பொறுத்து உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என்று கூறினார்.

நுவரெலியா , நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இலங்கை செய்தி

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி: நுவரெலியாவில் துயரம்

  • September 5, 2026
  • 0 Comments

நுவரெலியா , நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய பெருமாள் திவாகர் மற்றும் 23 வயது உடைய ஹப்புத்தளை பகுதியை சேர்ந்த அன்பழகன் நிக்சன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் குளிக்க சென்றபோதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். […]