ஈரானில் எரிபொருள் டேங்கர் லொறி விபத்து -10 பேர் உயிரிழப்பு
ஈரானில் நெடுஞ்சாலை ஒன்றில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி வெடித்ததில், குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானின் அரசு ஊடகங்கள் இன்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமேதான்-சனந்தாஜ் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த லொறியில் பிரேக்கிங் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் குறித்த டேங்கர் தீப்பிடித்தமையால் 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 06 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




