விளையாட்டு

FIFA தேர்தல் – மீண்டும் போட்டியில் குதித்த கியானி இன்ஃபான்டினோ

  • September 6, 2026
  • 0 Comments

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த  FIFA   தேர்தல்  வரும் 2027 மார்ச் 18, அன்று மொரோக்கோவில் நடைபெறவுள்ளது. 2027-ல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக FIFA தலைவர் ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். நிச்சயமாக, எதுவும் மாறவில்லை.  இன்ஃபான்டினோ மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என உலக கால்பந்து நிர்வாக அமைப்பு கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன. 2016-ல் […]

இலங்கை

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீள ஆரம்பம்

  • September 6, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் அஸூர் ஏர் நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. நவம்பர் மாதம் முதல் விமான சேவைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அஸூர் ஏர் அறிவித்துள்ளது. அதன்படி, ரஷ்யாவில் உள்ள 5 விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு தனது விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அஸூர் ஏர் நிறுவனத்துடன், ஏரோஃப்ளோட் மற்றும் எஸ்-7 ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க உள்ளன. இதற்கிடையில், 11 […]

இலங்கை

ஊழலை அகற்ற 22 ஆவது திருத்தம் அவசியம் : இந்த விடயத்தில் பின்வாங்க மாட்டோம்

  • September 6, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றியமைக்கப்படாது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன் அரசாங்கம் இந்தத் திருத்தத்தை முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார். புலத்சிங்களவவில் நடைபெற்ற பொதுநிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போதுமேலும் கருத்து வெளியிட்ட அவர், முன்மொழியப்பட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். நீதிமன்றம் தனது […]

ஐரோப்பா

22வது திருத்தம் – நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

  • September 6, 2026
  • 0 Comments

முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ஷேவுடன் Marc-André Franche  இன்று (06) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார். முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்த எதிர்க்கட்சியின் நிலைப்பாடு ஜனநாயகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், அது கட்சி அரசியல் அல்லது தனிப்பட்ட நலன்களால் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். குறிப்பாக 22வது திருத்தத்தை […]

ஈரான் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே சனிக்கிழமை பரஸ்பரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா – ஈரான்

  • September 6, 2026
  • 0 Comments

ஈரான் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே சனிக்கிழமை பரஸ்பரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஈரானின் மூன்று எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத பாதைகளில் பயணித்த மூன்று எண்ணெய் தாங்கிப் படகுகளைத் தாம் இலக்கு வைத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை நோக்கிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையத்திற்கு அருகிலுள்ள […]

உலகம்

கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் விபத்து – இருவர் பலி

  • September 6, 2026
  • 0 Comments

கலிபோர்னியாவின் வடமேற்கு ஃப்ரெஸ்னோவில் Fresno நேற்று சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மேலும் இருவர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். பிளைத் அவென்யூவில் Blythe Avenue உள்ள சியரா ஸ்கை பார்க் Sierra Sky Park விமான நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மேலதிக விவரங்களை ஆய்வு செய்து […]

With son Namal away, father Mahinda to take the stage in Anuradhapura on the 12th அரசியல் இலங்கை செய்தி

மகன் நாமலுக்கு பதிலாக 12 ஆம் திகதி மேடேயேறுகிறார் மஹிந்த

  • September 6, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுர பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் செயல்பாட்டுப் பணிப்பாளர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். நாமல் ராஜபக்ச இல்லாத குறையை தீர்க்கும் வகையில் மகிந்த ராஜபக்ச அனுராதபுரத்திற்கு வருகை தரவுள்ளதாக அவர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்யும் மக்கள் பேரணி எதிர்வரும் 12 ஆம் திகதி நிச்சயமாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக பிரதான மேடையில் ஏறாமல், மேடைக்கு முன்னால் உள்ள […]

இலங்கை

ஜனநாயக அமைப்பும், எதிர்கட்சியும் ஒடுக்கப்படுகிறது – ரணில் காட்டம்

  • September 6, 2026
  • 0 Comments

நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்க்கட்சியையும் ஒடுக்கும் ஒரு செயல்பாட்டில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கம், மருத்துவர்கள் மற்றும் துறவிகளுக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார். அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்தியும், துன்புறுத்தியும், காரணமின்றி அரசியல்வாதிகளைக் கைது செய்தும், […]

ஜெனிவாவில் நாளை தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளமாட்டார் என தெரியவருகின்றது. செய்தி

ஜெனிவா தொடரில் விஜித ஹேரத் பங்கேற்கமாட்டார்

  • September 6, 2026
  • 0 Comments

ஜெனிவாவில் நாளை தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளமாட்டார் என தெரியவருகின்றது. அவர் இலங்கை அரசாங்க குழுவுக்கு தலைமை தாங்குவதற்கு முன்னர் திட்டமிட்டிருந்தார். எனினும், தற்போது அவருக்குப் பதிலாக, ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி அரசாங்கத்தின் சார்பாக அறிக்கை சமர்ப்பிப்பார் என தெரியவருகின்றது. அதேவேளை, செப்ரெம்பர் 22 முதல் 28 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் […]

இலங்கை

எல்நினோ தாக்கம் – பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு

  • September 6, 2026
  • 0 Comments

எல்நினோ தாக்கத்தின் காரணமாக நாட்டின் பல பகுதிகளில வறண்ட வானிலை நிலவுகிறது. இதன்காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கமை 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் (டி.எம்.சி) தெரிவித்துள்ளது. மேற்கூறிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும்  1,13,354 மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் கூறியுள்ளது. இவற்றில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம் மொனராகலை ஆகும். அங்கு, மாவட்டத்தின் […]