பெர்லினில் 02 அரச துறை மீது சைபர் தாக்குதல்
பெர்லினில் அரசின் இரண்டு துறைகளை குறிவைத்து இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரான்சம்வேர் குழுவால் வெளியிடப்பட்ட திருடப்பட்ட தரவுகளின் தொகுப்பை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக பெர்லின் மாநில அரசு இன்று அறிவித்தது.
செப்டம்பர் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த இணையவழித் தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
கசிந்த தரவுகளின் ஆய்வு, சரிபார்ப்பு மற்றும் மதிப்பீட்டை ஒரு மத்திய நெருக்கடிப் பிரிவு மேற்பார்வையிடும் என்றும், பாதிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்குத் தகவல் தெரிவிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த ஹேக்கிங் சம்பவம் தொடர்பான சரிபார்க்கப்படாத கூற்றுக்களை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.




