அமைதி பேச்சுவார்த்தை – மொஸ்கோவில் அமெரிக்க தூதர்கள்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் வேகம் பெற்று வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துள்ளனர்.
ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை புட்டின் வரவேற்கும் காட்சிகளை கிரெம்ளின் வெளியிட்டுள்ளது.
அத்துடன் அவர்களை வரவேற்கும்போது தற்போதைய நிலமை அவ்வளவு எளிதானது அல்ல என்றும், “நாங்கள் இந்த நிலைமையை எப்படிப் பார்க்கிறோம்” என்பதை ரஷ்யா விளக்கும் என்றும் புட்டின் தெரிவிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
மூன்று நாட்களுக்கு இரு நாடுகளின் தலைநகரங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த உக்ரைனுடன் உடன்பட்டதற்காக புடினுக்கு விட்காஃப் Witkoff நன்றி தெரிவித்தார்.
இதேவேளை புட்டினுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு உயர்மட்ட தூதர்கள் இன்று உக்ரைன் செல்லவுள்ளனர்.




