உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட இதயத்தை நொறுக்கும் தோல்வியின் "தழும்பு" (Scar) இங்கிலாந்து அணியினரிடம் இன்னும் ஆறாமல் இருப்பதாக அவ்வணியின் வீரர் புகாயோ சாகா (Bukayo Saka) தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

உலகக்கிண்ண தோல்வித் தழும்பு இன்னும் ஆறவில்லை: இங்கிலாந்து அணி வீரர் உருக்கம்

  • September 23, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட இதயத்தை நொறுக்கும் தோல்வியின் “தழும்பு” (Scar) இங்கிலாந்து அணியினரிடம் இன்னும் ஆறாமல் இருப்பதாக அவ்வணியின் வீரர் புகாயோ சாகா (Bukayo Saka) தெரிவித்துள்ளார். 1966 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஆண்களுக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் விளிம்பில் தாமஸ் டுச்செலின் (Thomas Tuchel) தலைமையிலான இங்கிலாந்து அணி இருந்தது. எனினும், ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் அர்ஜென்டினா அடித்த இரண்டு அதிர்ச்சி கோல்களால் இங்கிலாந்து 2-1 என்ற […]

வவுனியா - கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான செல்வி வனிதா சேனாதிராஜா (வயது 41) பொலனறுவை, மின்னேரியா பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு: விசாரணை தீவிரம்

  • September 23, 2026
  • 0 Comments

வவுனியா – கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான செல்வி வனிதா சேனாதிராஜா (வயது 41) பொலனறுவை, மின்னேரியா பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த வனிதா சேனாதிராஜா, வவுனியா, கோவில்குளம் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினராகவும், அறியப்பட்ட கலை இலக்கிய ஆர்வலராகவும் செயற்பட்டு வந்துள்ளார். பொலனறுவை, மின்னேரியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்தே இவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காகச் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. […]

கருத்து & பகுப்பாய்வு

எல் நினோ’ தாக்கம் – உலகம் முழுவதும் 04 இலட்சத்திற்கு மேற்பட்ட மரணங்கள் நிகழும்

  • September 23, 2026
  • 0 Comments

இந்த ஆண்டு நிலவும் தீவிரமான ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வு உலகளாவிய வெப்பநிலையை வெகுவாக உயர்த்துவதால், வரும் பிப்ரவரி மாதம் வரை உலகம் முழுவதும் அதிகளவிலான மரணங்கள் ஏற்படும் என எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உலகம் முழுவதும் 4,51,000 மரணங்கள் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த வெப்பமடைதல் நிகழ்வு, மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை மேலும் தீவிரமாக்குவதுடன், இதுவரை பதிவானவற்றிலேயே மிக வலிமையான நிகழ்வாகவும் அமையக்கூடும் என்றும் […]

அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சவுதி அரசை நாடி, கோரிக்கை விடுத்த பின், இது தொடர்பில் இந்திய அரசு தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்திய தூதர் சந்தோஷ்-ஜா தம்மை இன்று நேரடியாக சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்தார். இந்தியா இலங்கை செய்தி

அனோஜனுக்காக களமிறங்குவாரா மோடி? மகஜர் கையளிப்பு

  • September 23, 2026
  • 0 Comments

அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சவுதி அரசை நாடி, கோரிக்கை விடுத்த பின், இது தொடர்பில் இந்திய அரசு தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்திய தூதர் சந்தோஷ்-ஜா தம்மை இன்று நேரடியாக சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்தார். அனோஜன் சிவராஜா தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பங்களிப்பை கோரி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இன்று மாலை இந்திய தூதுவரை சந்தித்தது. இதன் […]

கவலையான முகபாவனையுடன் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐரோப்பா

மேற்குக் கரையில் ஹமாஸ் செயல்படவில்லை – மக்ரோனின் கூற்றுக்கு நெதன்யாகு கண்டனம்

  • September 23, 2026
  • 0 Comments

மேற்குக் கரையில் ஹமாஸ் ஒருபோதும் செயல்பட்டதில்லை என்று ஐ.நா பொதுச் சபை உரையின்போது பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறிய கூற்றுகளுக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். பின்னர் பிரான்ஸ் அதிகாரி ஒருவர் மக்ரோனின் கருத்துக்களைத் தெளிவுபடுத்தி, ஹமாஸ் மேற்குக் கரையை ஆளவில்லை என்பதையே ஜனாதிபதி கூற விரும்பினார் என்று தெரிவித்தார். மேற்குக் கரையில் ஹமாஸ் தொடர்ந்து நடத்திவரும் பயங்கரவாதத் தாக்குதல்களையும், சமீபத்தில் ஒரு பிரெஞ்சு-இஸ்ரேலியக் குடிமகன் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டிய நெதன்யாகு மக்ரோனின் கருத்துக்களை […]

யாழ்ப்பாணம், அரியாலை - பூங்கன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று பிற்பகல் ரயில் மோதிய விபத்தில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் மகள் படுகாயமடைந்துள்ளார். இலங்கை செய்தி

ரயில் மோதி தந்தை பலி; மகள் படுகாயம்- யாழில் சோகம்

  • September 23, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், அரியாலை – பூங்கன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று பிற்பகல் ரயில் மோதிய விபத்தில் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் மகள் படுகாயமடைந்துள்ளார். பாடசாலையில் இருந்து தனது மகளை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச் சென்ற தந்தையே இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவியான மகள், உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் பணியாளரான […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளுக்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் (Mohamed Nasheed) தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை செய்தி

அனோஜனின் விடுதலைக்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி ஆதரவு

  • September 23, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளுக்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் (Mohamed Nasheed) தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அனோஜன் சார்பிலான இராஜதந்திர முன்னெடுப்பின் முதற்கட்டமாக, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைஸர் முஸ்தபா (Faiszer Musthapha) மற்றும் உபுல் குமாரப்பெரும (Upul Kumarapperuma) ஆகியோர் இன்று புதன்கிழமை மாலைதீவில் நஷீதைச் சந்தத்துப் பேச்சு நடத்தினர். அனோஜன் பதிவிட்ட கருத்துகள் இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை […]

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவிருந்த இரு தரப்புப் பேச்சு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை, இந்திய மீனவர் பேச்சு இடைநிறுத்தம்

  • September 23, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவிருந்த இரு தரப்புப் பேச்சு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்றமை மற்றும் கைது செய்யப்படுகின்றமை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக, இந்தியாவில் நாளைமறுதினம் (25) நடைபெறவுள்ள பேச்சில் பங்கேற்பதற்காக இலங்கைக் தரப்பிலிருந்து அதிகாரிகள் இந்தியா பயணமாகவுள்ளனர் என்று மீன்பிடி அமைச்சர் இ. சந்திரசேகர் இம்மாத ஆரம்பத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். எனினும், […]

இலங்கை

அனோஜனின் விடுதலை தொடர்பான கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

  • September 23, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பிவைப்பதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தேசிய மகா சபை – வடக்கு மாகாண ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண ஒன்றியம் சார்பில் இக்கோரிக்கை மனு, நேற்றைய தினம்  (22) வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. குறித்த […]

ஐரோப்பா

AI-ஆல் ஜனநாயத்திற்கும் ஆபத்து – பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை

  • September 23, 2026
  • 0 Comments

“உண்மைக்கும் புனைவுக்கும், பிரச்சாரத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் பொதுமக்கள் கண்டறிவது கடினமாக இருக்கும் ஒரு சூழல், ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாகும்” என்று பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் குறிப்பிட்டுள்ளார். புதிய ‘தகவல் பாதுகாப்புக்கான தேசிய மையம்’ (National Centre for Information Defence) அமைப்பதற்கான திட்டங்களை பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்னம் அறிவித்திருந்தார். இது தொடர்பில் பிபிசி ரேடியோ 4-இடம் கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சமீப காலத்தில் பிரத்தானியாவிலும், […]