உலகம்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்து – நால்வர் பலி

  • September 27, 2026
  • 0 Comments

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மாண்ட்ரீல் அருகே ஹெலிகாப்டர்  ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனமொன்றுக்கு  சொந்தமான ஹெலிகாப்டரே இவ்வாறு  விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம்

தென்னாப்பிரிக்காவில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு – 27 பேர் பலி

  • September 27, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டு பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக இரண்டு கார்களில் வந்த 8 துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேப் டவுனில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 […]

உலகம்

ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்த இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் – 28 பேர் உயிரிழப்பு

  • September 27, 2026
  • 0 Comments

பாகிஸ்தானிலிருந்து இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் அடங்கிய குழு எல்லையை கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து நூரிஸ்தான் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 28 போராளிகள் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானிய ஆயுதக் குழுக்கள் அந்தப் போராளிகளுக்கு ஆதரவளித்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் முன்னாள் பாதுகாப்புப் படையினர் என்றும்  அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை பாகிஸ்தானின் தகவல் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு – ஐவர் கைது

  • September 27, 2026
  • 0 Comments

பயங்கரவாதம் மற்றும் வெடிகுண்டு குற்றங்கள் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்துபேர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் அமெரிக்காவின் நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தும் இங்கிலாந்தின் விமானப்படைத் தளம் அருகே கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. இராணுவ  வெடிகுண்டு அகற்றும் பிரிவுகள் சம்பவ இடத்தில் உள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள பல வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு அப்பகுதி மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கைது […]

உலகம்

ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துமாறு நாடுகளுக்கு அழுத்தம்

  • September 27, 2026
  • 0 Comments

ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துமாறு நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, உலகெங்கிலும் தூதர்களை அனுப்பியதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் Scott Bessent தெரிவித்துள்ளார். மேலும், அந்நாட்டின் விமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை இலக்காகக் கொண்ட புதிய கட்டுப்பாடுகளையும் அவர் வரவேற்றுள்ளார். இது தொடர்பில்  எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  “எனது வழிகாட்டுதலின் பேரில், நாடுகளுடன் கலந்துரையாடுவதற்கும் ஈரானிய ஆட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவதற்கும் உலகெங்கிலும் குழுக்கள் அனுப்பப்பட்டன,”எனக் குறிப்பிட்டுள்ளார். துருக்கி மற்றும் ஓமான் ஆகிய […]

உலகம்

நதிக்கு மேலே மெல்லிய கயிற்றில் நடந்து சீன வீரர் சாகசம்

  • September 27, 2026
  • 0 Comments

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள நதிக்கு மேலே, வெறும் இரண்டரை சென்டிமீட்டர் மெல்லிய கயிற்றில் நடந்து, சீன வீரர் ஒருவர் செய்த சாகசம் செய்துள்ளார். சீனாவின் புகழ்பெற்ற ‘டைகர் லீப்பிங் கார்ஜ்’ பள்ளத்தாக்கில், ஜின்ஷா நதியின் குறுக்கே சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட கயிற்றில், சாகச வீரர் ஷி ஹைலின் நடந்து சென்றார். கீழே நீர் சீறிப்பாய, சுழன்றடித்த காற்றில் கயிறு ஆடியபோதும், அவர் தனது கைகளை அகல விரித்தும், இடையிடையே முழங்கால்களை வளைத்து நிலைநிறுத்தியும் […]

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

திலீபன் சிலை விவகாரம்: யாழில் போராட்டம்

  • September 27, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தியாக தீபத்தின் நினைவாலயம் பகுதியில் தியாக தீபத்தின் 39ஆம் ஆனது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வான கடந்த 15ஆம் திகதி சிலை வைக்கப்பட்டு […]

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி, மத்திய அரசு குறுகிய அரசியல் லாபங்களைக் கடந்து மறைந்த தலைவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தியா செய்தி

மன்மோகன் சிங்கின் சிலை திறப்பு: ‘பாரத ரத்னா’ விருது வழங்குமாறு பரிந்துரை

  • September 27, 2026
  • 0 Comments

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி, மத்திய அரசு குறுகிய அரசியல் லாபங்களைக் கடந்து மறைந்த தலைவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மன்மோகன் சிங்கின் தொலைநோக்குப் பார்வையை முன்னோக்கி எடுத்துச் செல்ல ‘அறிவு மையம்’ ஒன்றை நிறுவ வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். ஹைதராபாத் பைனான்சியல்மாவட்டத்தில் (Financial District) உள்ள விப்ரோ சந்திப்பில் (Wipro Circle) நிறுவப்பட்டுள்ள […]

2016 ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LoC) அப்பால் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய 'சர்ஜிகல் ஸ்டிரைக்' (Surgical Strike) தாக்குதலைப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நினைவுகூர்ந்தார். இந்தியா செய்தி

பயங்கரவாதத்தை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்லும் இந்தியா

  • September 27, 2026
  • 0 Comments

2016 ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LoC) அப்பால் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ (Surgical Strike) தாக்குதலைப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நினைவுகூர்ந்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் உறுதியான மற்றும் தீர்க்கமான பதிலடியைக் கொடுக்கும் என்பதை இந்த நடவடிக்கை உலகிற்குத் தெளிவாக உணர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது மாதாந்த ‘மன் கி பாத்’ (Mann Ki Baat) வானொலி நிகழ்ச்சியின் 138-வது அத்தியாயத்தில் உரையாற்றிய […]

இலங்கை

பத்தேகமவில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு

  • September 27, 2026
  • 0 Comments

பத்தேகமவின் ஹல்பத்தோட்டப் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு பெண்கள் உட்பட மொத்தம் மூவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில்  ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொரு பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து இரண்டு பொலிஸ் […]