ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: ராஜதந்திர தீர்வே ஒரே வழி – ஈரான் திட்டவட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஈரானின் அமைதி முன்மொழிவை நிராகரிப்பதாகத் தெரிவித்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு இராஜதந்திரப் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு என்று ஈரான் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. “எங்களது நிபந்தனைகள் தெளிவானவை. இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் சாத்தியமாகும்,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் […]













