கனடாவின் கியூபெக் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்து – நால்வர் பலி
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மாண்ட்ரீல் அருகே ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான ஹெலிகாப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஹெலிகாப்டரில் இருந்த நான்கு பேரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
மேலும் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




