உலகம்

நதிக்கு மேலே மெல்லிய கயிற்றில் நடந்து சீன வீரர் சாகசம்

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள நதிக்கு மேலே, வெறும் இரண்டரை சென்டிமீட்டர் மெல்லிய கயிற்றில் நடந்து, சீன வீரர் ஒருவர் செய்த சாகசம் செய்துள்ளார்.

சீனாவின் புகழ்பெற்ற ‘டைகர் லீப்பிங் கார்ஜ்’ பள்ளத்தாக்கில், ஜின்ஷா நதியின் குறுக்கே சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட கயிற்றில், சாகச வீரர் ஷி ஹைலின் நடந்து சென்றார்.

கீழே நீர் சீறிப்பாய, சுழன்றடித்த காற்றில் கயிறு ஆடியபோதும், அவர் தனது கைகளை அகல விரித்தும், இடையிடையே முழங்கால்களை வளைத்து நிலைநிறுத்தியும் நடந்து சென்றது பார்ப்போரை திகிலடைய வைத்தது.

நதியின் நீர் பாயும் திசைக்கு எதிர் திசையில், ஆர்ப்பரிக்கும் ஆற்று வெள்ளத்திற்கு மேலே ஷி ஹைலின் 100 மீட்டர் தூரத்தைக் கடந்து சாதனை படைத்தார்.

இதற்கு முன்னர் அவர், சீனாவின் மஞ்சள் நதியை கயிற்றில் கடந்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்