உலகம்

தென்னாப்பிரிக்காவில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு – 27 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டு பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக இரண்டு கார்களில் வந்த 8 துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேப் டவுனில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதுடன்,  11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்